விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 30
Appearance
- 1431 – நூறாண்டுப் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் (படம்) ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
- 1814 – நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரெஞ்சு எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.
- 1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பட்டேல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
- 1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
- 1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒய். வி. ராவ் (பி. 1903) · பாம்பன் சுவாமிகள் (இ. 1929) · சுந்தர ராமசாமி (பி. 1931)
அண்மைய நாட்கள்: மே 29 – மே 31 – சூன் 1