விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 13
Appearance
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 13 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்.
- 1689 – வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1880 – தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.
- 1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.
- 2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- 2008 – ஆத்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக (படம்) ஆத்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.
அ. மருதகாசி (பி. 1920) · செய்குத்தம்பி பாவலர் (இ. 1950) · பாலு மகேந்திரா (இ. 2014)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 12 – பெப்பிரவரி 14 – பெப்பிரவரி 15