உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:அறிவுப் பகிர்வு 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:அறிவுப் பகிர்வு 2024 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

தொடர்பங்களிப்பாளர்கள் தாம் கற்றறிந்தவற்றை தமக்குள் பகிர்ந்துகொள்வதற்கான நேரடிச் சந்திப்பு நிகழ்வு.

நோக்கம்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துவரும் பயனர்கள், தொகுத்தலின் வெவ்வேறு பிரிவுகளில் தனித்திறன் கொண்டுள்ளனர். சில திறன்கள் எளிய நுட்பத்தைக் கொண்டிருந்தாலும், அனைவராலும் அறியப்படாமல் இருக்கின்றன.

எளிய தொகுத்தல் நுட்பங்களை அனைவரும் அறிந்துகொள்ள வைத்தல் இந்நிகழ்வின் நோக்கம் ஆகும். எதிர்காலத்தில் பங்களிக்கும் பயனர்களுக்கு உதவும் வகையில், இந்த நுட்பங்களை ஆவணப்படுத்துதல் கூடுதல் நோக்கம் ஆகும்.

இரண்டு தொடர்ச்சியான நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறும்.

அணுகுமுறை

[தொகு]
  1. தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்தான பட்டியல் தயாரித்தல்.
  2. தமிழ்நாட்டில் வாழும் 15 பயனர்கள் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளுதல்.
  3. பயனர்கள் தொகுத்தல் நுட்பங்களை தமக்குள் பகிர்ந்துகொள்ளுதல்.

இலக்கு

[தொகு]

நிகழ்விற்குப் பிறகான 3 மாத காலத்தில், கட்டுரை ஆழத்தை 5 புள்ளிகள் அதிகரித்தல். (எடுத்துக்காட்டாக, கட்டுரை ஆழம் 50 என்பதனை 55 என்பதாக உயர்த்துதல்)

நிகழ்வு குறித்த விவரங்கள்

[தொகு]
  • ஊர்: முடிவு செய்யப்பட வேண்டும்.
  • நிகழ்விடம்: முடிவு செய்யப்பட வேண்டும்.
  • தேதி: திசம்பர் 2024
  • நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை

நிகழ்வு அமைப்பு

[தொகு]
  1. ஒவ்வொரு பயனரும் தான் செய்துவரும் தொகுத்தல் நுட்பங்கள் குறித்து சிறு விளக்கம் அளித்தல் (15 பயனர்கள் x 30 நிமிடங்கள் = 7 மணிகள், 30 நிமிடங்கள்)
  2. பயனர்கள் தமக்குத் தேவைப்படும் உதவிகளைக் கோருதலும், அதற்குரிய உதவிகளைப் பெறுதலும் (3 மணி நேரம்)
  3. Kanags, Antan மூலமான அறிவுப் பகிர்வு (1 மணி நேரம், 30 நிமிடங்கள்)

ஏற்பாடுகள்

[தொகு]
  1. திட்டமிடுதலை முடித்தல்.
  2. சி.ஐ.எஸ் அமைப்பிடம் நிதிக்கான கோரிக்கை தாக்கல் செய்தல்.

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

[தொகு]