வாஸ்ப்-18பி
வாஸ்ப்-18பி (WASP-18b) என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள ஒரு கோள் ஆகும். இதன் சுற்றுக்காலம் ஒரு நாளை விடக் குறைவானதாகும். இதன் திணிவு ஜுப்பிட்டரின் திணிவைவிட 10 மடங்கு குறைவானதாகும்,[1]. ஈற்றுப் பேரலை வேகக் குறைப்புக் (Tidal deceleration) காரணமாக, இது படிப்படியாக தனது சூரியனான வாஸ்ப்-18 (WASP-18) உடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்மோதல் இடம்பெற ஒரு மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். இக்கோள் அதன் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 1.9 மில்லியன் மைல்கள் தூரத்தில் அமைந்திருக்கிறது[1]. இதன் விண்மீன் பூமியில் இருந்து 325 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கோள் இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் பேராசிரியர் கொயெல் ஹெலியர் என்பவர் கண்டுபிடித்தார்[2].
இதன் சூரியனுக்கும் மிகக் கிட்டவாகவுள்ள ஒரு கோள் ஏன் இன்னமும் அதன் சூரியனுடன் மோதவில்லை என கீல் மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்[3][1]. இதன் சுற்றுப்பாதை எந்த வீதத்தில் சுருங்குகிறது என்பதை அடுத்த பத்தாண்டுகளில் கண்டுபிடித்து விடலாம் என வானியலாளர்கள் நம்புகிறார்கள்[4].
எமது சூரியக் குடும்பத்தில் உள்ள செவ்வாய் கோளின் போபோசு என்ற சந்திரன் வாஸ்ப்-18பி போன்று ஒத்த மர்மம் உடையது.போபோசு செவ்வாய்க் கோளை 5,600௦௦ மைல் தூரத்தில் மட்டுமே சுற்றி வருகிறது, அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட 40௦ மடங்கு குறைவானதாகும்[5].
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]தொடர்பான செய்திகள் உள்ளது.
- ↑ 1.0 1.1 1.2 Hellier, Coel (2009-ஆகஸ்ட் 27). "An orbital period of 0.94 days for the hot-Jupiter planet WASP-18b". நேச்சர் 460: 1098-1100. doi:10.1038/nature08245. http://www.nature.com/nature/journal/v460/n7259/full/nature08245.html. பார்த்த நாள்: 2009-ஆகஸ்ட் 28.
- ↑ Suicidal planet seems on death spiral into star பரணிடப்பட்டது 2009-09-01 at the வந்தவழி இயந்திரம், breitbart.com, August 26, 2009
- ↑ கமில்ட்டன், டி.பி (2009-ஆகஸ்ட் 27). "Extrasolar planets: Secrets that only tides will tell". நேச்சர் (இதழ்) 460: 1086-1087. doi:10.1038/4601086a. http://www.nature.com/nature/journal/v460/n7259/full/4601086a.html. பார்த்த நாள்: 2009-08-28.
- ↑ Thompson, Andrea (2009-ஆகஸ்ட் 26). "Newfound Planet Might Be Near Death". Space.Com. பார்க்கப்பட்ட நாள் 2009-ஆகஸ்ட் 28.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Astrophysicists puzzle over planet that's too close to its sun, Los Angeles Times, August 27, 2009