உள்ளடக்கத்துக்குச் செல்

வாழப்பள்ளி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழப்பள்ளி கோவில்
கோவில் கோபுரம்
பெயர்
தமிழ்:திருவாழப்பள்ளி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:சங்கனாச்சேரி
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன், விநாயகர், பார்வதி
சிறப்பு திருவிழாக்கள்:உத்சவம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:மூன்று
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி.பி 1665-ல்(840 கொல்லம் காலம்) புனரமைக்கப்பட்டது.
அமைத்தவர்:சேரர் பரம்பரை
கோயில் அறக்கட்டளை:திருவான்கூர் தேவசம் அறக்கட்டளை

வாழப்பள்ளி கோவில் இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாசேரி நகரத்தில் இருகின்றது. முதலாம் சேர பரம்பரையை சேர்ந்தவர்கள் இக்கோயிலை கட்டியதாக கருதப்படுகிறது. சிவன், விநாயகர், பார்வதி ஆகிய கடவுள்கள் இங்கு வழிபடப்படுகின்றனர் என்ற போதிலும் சிவனே முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறார். பழங்கதைப்படி கேரளம் திருமாலின் 6-வது அவதாரமான பரசுராமரால் கொடையாக அருளப்பட்டதாகும். பரசுராமனே இக்கோயிலுள்ள இறைவன் மகாதேவன் சிலையை நிறுவியதாக கருதப்படுகிறது. பரசுராமன் நிறுவிய 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு தெரியவில்லை.

வாழப்பள்ளி உற்சவம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

கோவில் படங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழப்பள்ளி_கோவில்&oldid=3837136" இலிருந்து மீள்விக்கப்பட்டது