வால்போனே
Appearance

வால்போனே (Volpone) என்பது ஆங்கில நாடக ஆசிரியர் பென் ஜான்சனின் நகைச்சுவை நாடகமாகும். இது முதன்முதலில் 1605-1606-இல் எழுதப்பட்டது. இது நகர நகைச்சுவை மற்றும் விலங்குகளைக்கொண்டு எழுதப்படும் கட்டுக்கதையின் கூறுகளை விவரிக்கின்றது. பேராசை மற்றும் காமத்தை அதிகமாக நையாண்டி செய்யும் இந்த நாடகம் ஜான்சனின் மிகவும் அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகமாக உள்ளது. மேலும் ஜேகோபியன் கால நகைச்சுவை நாடகங்களில் இது ஒரு சிறந்த நகைச்சுவை நாடகமாக கருதப்படுகிறது.[1] [2]
கதாபாத்திரங்கள்
[தொகு]
- வால்போனே (தந்திரக்கார நரி) - ஒரு பேராசை கொண்ட மற்றும் பணக்கார குழந்தை இல்லாத வெனிஸ் நகரத்தை சேர்ந்த பெரிய மனிதர்
- மோஸ்கா (ஈ) - அவரது வேலைக்காரன்
- வோல்டோர் (கழுகு) - ஒரு வழக்கறிஞர்
- கார்பாசியோ (காக்கை) - ஒரு பேராசை கொண்ட பழைய கஞ்சன்
- பொனாரியோ - கோர்பாசியோவின் மகன்
- கோர்வினோ (கரியன் காகம்) - ஒரு வணிகர்
- செலியா - கோர்வினோவின் மனைவி
- சர் பொலிடிக் உட் பி - அபத்தமான ஆங்கிலேயர்
- லேடி உட்பி(கிளி) - ஆங்கில பெண்மணி மற்றும் சர் பொலிடிக் உட் பியின் மனைவி
- பெரெக்ரின் ("பில்கிரிம்") - மற்றொரு, மிகவும் நுட்பமான, ஆங்கிலப் பயணி
- நானோ - ஒரு குள்ளன், வால்போனின் துணை
- ஆண்ட்ரோஜினோ - ஒரு ஹெர்மாஃப்ரோடைட், வோல்போனின் துணை
- காஸ்ட்ரோன் - ஒரு திருநங்கை, வோல்போனின் துணை
- அவகேடோரி - வெனிஸின் நீதிபதிகள்

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Volpone (1971) production credits". Stratford Festival Archives. Retrieved 2019-06-22.
- ↑ ""Volpone" At Independent.". The Sydney Morning Herald (NSW): p. 4. 4 April 1947. http://nla.gov.au/nla.news-article18020187.