உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:Welcome

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறுதியில் 'உங்கள் தொடர்ச்சியான பங்களிப்புகளை எதிர்நோக்குகிறோம்' போன்றவொரு வரியை இணைக்கலாமா? பலரும் தங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தைப் பயன்படுத்துவது மட்டுமே செய்யக்கூடியது என்று எண்ணிவிடுகிறார்களோ? -- சுந்தர் \பேச்சு 07:12, 1 ஏப்ரல் 2008 (UTC)

முன்பு பிசுகோத்துக்கள் இருந்ததை மாற்றி வடைகள் படத்தை இட்டது நல்ல மாற்றமே. எனினும் தமிழ்ப் பண்பாட்டுற்கேற்ப தேங்காய், வெற்றிலை, பாக்கு கொடுத்து வரவேற்பது பொருத்தம் என நினைக்கிறேன். இது சமய சார்பற்றதா என அறிய விரும்புகிறேன்.--மணியன் 04:40, 5 மார்ச் 2010 (UTC)
வடை என்பது இனிப்பு இல்லையே!! வரவேற்கும் பொழுது வடை கொடுப்பது நம் முறை அல்ல என்பது என் கருத்து! ஒரு கோப்பையில் மோர் என்பது தானே நம் வரவேற்பு முறை!! அது மிகவும் பொருந்தும் என்பது என் கருத்து! வாருங்கள் புதுப்பயனரே, அறிவு தாகத்தை தணிக்க இந்த விக்கிப்பீடியா மோரை அருந்துங்கள் என்று ஒரு மோர் கோப்பையின் புகைப்படத்தை சேர்க்கலாமே!! :) -- Vatsan34 09:19, 6 மார்ச் 2010 (UTC)

தற்போது கடையில் வடை சுட்ட சட்டியுடன் உள்ள படம் அவ்வளவு நேர்த்தியாக இல்லை :) முன்பு இருந்த ரொட்டி படமே நன்றாக இருந்தது. அல்லது, உணவின் படம் தான் இட வேண்டும் என்று இல்லை. புன்னகை கூடிய தமிழ்க் குழந்தைகள் முகம் போல கூட இடலாம்--ரவி 16:44, 6 ஏப்ரல் 2010 (UTC)

தற்போது உள்ள படம் வடைகளைப் பரிமாறி வரவேற்பதாக இல்லை, வடைகளைக் குவித்து வைத்துள்ளது. மாறாக ஒரு தட்டில் பழங்களையோ, பிசுகட்டையோ வைத்துத் தரலாம். இல்லையென்றால் ரவி சொன்னது போல குழந்தைகள் படத்தை இடலாம். -- சுந்தர் \பேச்சு 05:15, 7 ஏப்ரல் 2010 (UTC) பி.கு. இந்த மாற்றத்தைச் செய்யும் வரை subst பயன்படுத்த வேண்டாம்.
யாரும், நான் அறிந்தவரை, வருவோரை தின்பண்டம் கொடுத்து வரவேற்பதில்லை.ஆனால், வருவோருக்கு மோர் தரும் வழக்கம் நம்மிடையே இன்றும் கிராம வழக்கத்தில் இருக்கிறது. ஒரு படத்தைப் பார்த்து அது மோரா அல்லது பாலா என புரிந்து கொள்ளுதல் சிரமமே . பூங்கொத்து அல்லது இன்முகம் காட்டுதல் படி உள்ள படங்களை இட எண்ணுகிறேன்.

எலுமிச்சைக்கொடுத்து பார்க்கும் வழக்கமும் தமிழகத்தில் உண்டு.-- உழவன் +உரை.. 00:24, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

புதிய வரவேற்புப் படிமம் மிக அருமையாக உள்ளது. தேர்ந்தெடுத்த தகவல் உழவனுக்குப் பாராட்டுகள்--இரவி (பேச்சு) 19:33, 3 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்கள் அனைவருக்கும் இணைப்பு கொடுக்க?

[தொகு]

புதுப்பயனர்கள் அனைவருக்கும் தன் தொடர்பான பேச்சுப்பக்கம் இருப்பதை தெரிவிக்க இந்த வார்ப்புருவில் அவர்களை இணைப்பிடும் மாறு வைத்துவிட்டு அவர்களுக்கு அதை நோட்டிபிக்கேசனில் காண்பிக்குமாறு வைக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:34, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வடிவமைப்பு

[தொகு]

தற்போதுள்ள வடிவமைப்பில் மாற்றம் வேண்டும். முன்பிருந்தது போன்று அடைக்கப்பட்ட பெட்டியில் வரவேற்பிருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 06:52, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Welcome&oldid=2014175" இலிருந்து மீள்விக்கப்பட்டது