உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selvasivagurunathan m: எதற்காக இந்த வார்ப்புரு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது? என்ன தேவை?--Kanags \உரையாடுக 22:32, 7 செப்டம்பர் 2022 (UTC)

@Kanags: வணக்கம். என் விளக்கத்தை கீழே தந்துள்ளேன்:
  1. கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் ஒரு முயற்சியாக திட்டப் பக்கம் தொடங்கப்பட்டது. மாரத்தான் மூலமாகவும், சிறப்பு மாதம் மூலமாகவும் இத்திட்டத்தை இயக்கலாம் என முடிவாகியது. மீதமிருக்கும் கட்டுரைகளை அதற்குப் பிறகும் தொடர்ந்து செய்யலாம் என கருதப்பட்டது.
  2. ஒட்டுமொத்த கட்டுரைகளை கவனித்த போது, சுமார் 50 கட்டுரைகள் மருத்துவக் கட்டுரைகளாக துணைப் பகுப்பிலும், சில கட்டுரைகள் நபர்கள் எனும் துணைப் பகுப்பிற்குள்ளும் இருந்தன. சுமார் 1000 கட்டுரைகள் தாய்ப் பகுப்பிற்குள் இருந்தன. இதைப் பார்த்ததும், அனைத்துக் கட்டுரைகளையும் துறைவாரியாக வகைப்பிரித்தால், பங்களிப்பாளர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்டுரைகளை எடுத்து தொகுக்க எளிதாக இருக்கும் என நினைத்தேன்.
  3. மருத்துவக் கட்டுரைகள், நபர்கள் பகுப்பிற்குள் இருக்கும் கட்டுரைகள், தாய்ப் பகுப்பிலும் இருப்பதை அறிந்தேன். இங்ஙனம் இருந்தால், வகைப்பிரித்தல் எளிதாக இருக்காது எனத் தோன்றியது; ஏனெனில், தாய்ப் பகுப்பில் பட்டியல் குறைந்தால்தானே... மற்ற கட்டுரைகளை எந்தத் துறையைச் சார்ந்தவை என அறிய இயலும். {{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரை}} என்பதனை அலசியபோது < includeonly >பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்< /includeonly > என்பதன் மூலமாக கட்டுரைகளில் பகுப்பு தானாக சேர்வது போல வடிவமைக்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்டேன்.
  4. < includeonly >பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்< /includeonly > எனும் உள்ளடக்கத்தை நீக்கி {{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}} என்பதாக புதியதொரு வார்ப்புரு உருவாக்கினேன். உரிய துணைப் பகுப்பினை இட்டுவிட்டு, இந்த புதிய வார்ப்புருவை கட்டுரையில் இட்டால், கட்டுரையானது துணைப் பகுப்பில் மட்டும் இருக்கும் என்பதுவே நோக்கம். எடுத்துக்காட்டு: இந்த மாற்றம்
  5. 1000 கட்டுரைகளை செம்மைப்படுத்தும் ஒரு பணியை இயன்றளவு திறம்பட செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறாக செயல்பட்டேன். புதிய வார்ப்புரு, புதிய துணைப் பகுப்புகள், கட்டுரைகளில் துணைப் பகுப்பினை இட்ட கையோடு வார்ப்புருவை மாற்றுவது - இவையனைத்தும் பராமரிப்பு / செம்மைப்படுத்துதல் பணிக்கான ஆயத்தப் பணிகள். கட்டுரையின் தரத்தை இவை உயர்த்துவதில்லை என்பது தெள்ளத் தெளிவு.
  6. 1000 கட்டுரைகளை செம்மைப்படுத்தும் ஒரு பணிக்காக, ஒருங்கிணைப்பாளராக... 1100 தொகுப்புகள், ஒட்டுமொத்தமாக 24 மணி நேரம் செலவிடுதல் ஆகியன தவறில்லை என கருதினேன். இந்தத் தொகுத்தலை எனது BOT பயனர் கணக்கு மூலமாக செய்து வருகிறேன்.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:48, 8 செப்டம்பர் 2022 (UTC)

@Selvasivagurunathan m: தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் பணியை. நீண்டகாலமாக எவராலும் தீண்டப்படாத கட்டுரைகளாக இவை உள்ளன.--Kanags \உரையாடுக 04:06, 8 செப்டம்பர் 2022 (UTC)
@Kanags: உங்களின் கேள்வியும், எனது பதிலும் மற்றவர்களின் ஐயங்களையும் தீர்த்துள்ளன; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:02, 10 செப்டம்பர் 2022 (UTC)