வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூலை 2010
Appearance
- ஜூலை 5:
- 2010 உலகக்கோப்பை கால்பந்து: நெதர்லாந்து அணியுடனான தோல்வியை அடுத்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் டுங்கா உட்பட அவரது பயிற்சியாளர் குழுவினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். (பிபிசி)
- ஜிஎஸ்பி சிறப்பு வரிச் சலுகையை இலங்கை இழந்தது
- புற்றுநோயைக் குணப்படுத்த 'வெடி குண்டு', அறிவியலாளர்கள் முயற்சி
- ஜூலை 4:
- பிலிப்பீன்சில் பேருந்து ஒன்று சுவர் ஒன்றுடன் மோதியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபயெல் நதால் 2010 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் போட்டியில் வெற்றி பெற்றார். (பிபிசி)
- புரோகிரஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைய எடுத்த இரண்டாவது முயற்சி வெற்றி
- ஜூலை 3:
- தென் கொரியாவில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2010 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் வெற்றி பெற்றார். (பிபிசி)
- கால்பந்து 2010: காலிறுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் தோல்வி
- கிர்கிஸ்தானின் அரசுத்தலைவராக ரோசா ஒட்டுன்பாயெவா பதவியேற்றார்
- கொங்கோவில் எண்ணெய்த் தாங்கி வெடித்ததில் இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- ஜூலை 2:
- தாய்லாந்தில் குண்டுவெடிப்பொன்றில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- புரோகிரஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும் முயற்சி தோல்வி
- கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் பிரேசில் தோல்வி
- கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது
- சூரியனை ஒத்த விண்மீனைச் சுற்றும் கோளின் "முதல்" படம் உறுதிப்படுத்தப்பட்டது
- ஜூலை 1:
- பாகிஸ்தான், லாகூர் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். 175 பேர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)
- துருக்கியின் தென்கிழக்கில் இடம்பெற்ற மோதலில் 11 குர்தியகள், மறும் 4 படையினர் கொல்லப்பட்டனர். (காலீஜ் டைம்ஸ்)
- சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் 24 மணிநேர ஆங்கில தொலைக்காட்சி உலகசேவையை ஆரம்பித்துள்ளது. (ஏபி)
- காபொனில் கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிரினம் இருந்ததை உறுதிப்படுத்தியது. பிபிசி)
- அமெரிக்க மருத்துவர் ஜெயந்த் பட்டேலுக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- மாவோயிசவாதிகளின் நெருக்கடியை அடுத்து நேபாளப் பிரதமர் பதவி விலகினார்
- அல்ஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்