வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2009
Appearance
- ஏப்ரல் 23: பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 70 மைல் தூரத்தில் உள்ள மாவட்டம் ஒன்றை தலிபான்கள் கைப்பற்றினர். (பிபிசி)
- ஏப்ரல் 22: உலகப் பெருங்கடலின் 1,700,000 சதுர கிமீ பரப்பளவுக்கு ஆர்ஜெண்டீனா உரிமை கோரியது. (பிபிசி)
- ஏப்ரல் 21: சூரிய மண்டலத்துக்கு வெளியே கிளீசு 581 e என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. (எம்எசென்)
- ஏப்ரல் 20:
- 2009-ம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. (நியூயோர்க் டைம்ஸ்)
- சீனப் பெருஞ்சுவரின் 3,850 கிமீ பகுதியைக் கண்டுபிடித்திருப்பதாக சீனா அறிவித்தது. (பிபிசி)
- ஏப்ரல் 17: ஆப்கானிசுத்தானில் நங்காகார் மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். (ஸ்கை செய்திகள்)
- ஏப்ரல் 16: இந்தியாவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகிய முதல் நாளில் 17 பேர் நக்சலைட்டுகளினால் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆன்லைன்)
- ஏப்ரல் 15: பிரெஞ்சு கடற்படையினர் ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் 11 பேரைக் கைப்பற்றினர். (பிபிசி)
- ஏப்ரல் 14: உலகின் முதலாவது படியெடுப்பு முறையிலான ஒட்டகம் பிறந்திருப்பதாக துபாயில் அறிவிக்கப்பட்டுள்ளது. (டெலிகிராப்)
- ஏப்ரல் 13: ஜோர்ஜியாவின் அதிபர் மிக்கைல் சாக்கஷ்விலிக்கு எதிரான போராட்டங்கள் திபிலீசி நகரில் தொடர்ந்தது.(ஏஎஃபி)
- ஏப்ரல் 12: சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கப்பல் தலைவர் ரிச்சார்ட் பிலிப்ஸ் வ்டுவிக்கப்பட்டார். (சீஎனென்
- ஏப்ரல் 11:
- தாய்லாந்தில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஆசியான் உச்சி மாநாடு இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- அப்தெலசீஸ் பூட்டெபிலிக்கா அல்ஜீரியாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)
- பிஜியின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டு இராணுவத்தளபதி கொமர்டோர் பிராங் பைனிமாறாமா அதிபர் இலொய்லாவால் நியமிக்கப்பட்டார். (தினக்குரல்)
- ஏப்ரல் 10: பிஜியின் அரசியலமைப்பை அந்நாட்டு அதிபர் இடைநிறுத்தம் செய்தார். (நியூசிலாந்து ஸ்டந்ப்)
- ஏப்ரல் 9: பீஜியின் இராணுவ அரசு சட்டவிரோதமானது என அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (யாகூ செய்திகள்)
- ஏப்ரல் 8: தாய்லாந்து, பாங்கொக் நகரில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் 30,000 பேர் கலந்து கொண்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஏப்ரல் 7: கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ பிஜிமோரிக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. (வாசிங்டன் போஸ்ட்)
- ஏப்ரல் 6: இத்தாலியில் இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் 207 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- ஏப்ரல் 5: மல்தோவாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பொதுவுடமைக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 3:
- நஜிப் துன் ரசாக் மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பதவியேற்றார். (சீஎனென்)
- எல்லைப்பிரச்சினையில் உள்ள பிரியா விகார் கோயில் அருகே தாய்லாந்து, கம்போடியா படையினர் தமக்கிடையே துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். (சீஎனென்)
- ஏப்ரல் 2:
- பிச்சை எடுத்தலை வங்காள தேசம் தடை செய்தது. (பிபிசி)
- ஜி20 உச்சிமாநாடு இலண்டனில் ஆரம்பமாகியது. (பிபிசி)
- ஏப்ரல் 1:
- பிரித்தானிய ஹெலிகாப்டர் ஒன்று ஸ்கொட்லாந்து வட பகுதியில் உள்ள கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- அல்பேனியா, மற்றும் குரொவேசியா நேட்டோ அமைப்பில் இணைந்தன. (ஏஎஃப்பி)
- சென் பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் விளாடிமிர் லெனினின் சிலை ஒன்று சேதமடைந்தது. (மாஸ்கோ டைம்ஸ்)