உள்ளடக்கத்துக்குச் செல்

வானூர்தி பாதுகாவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயணிகள் வானூர்தி பாதுகாவலர் (sky marshal), என்பவர் வானூர்தி செல்வழிக்கடத்தல்களை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு பயணிகள் விமானத்திலும் நியமிக்கப்படும் ஒரு இரகசிய சட்ட அமலாக்க அல்லது பயங்கரவாத எதிர்ப்பு முகவர் ஆவார். இத்தகைய முகவர் வானூர்தியின் பாதுகாப்பு அதிகாரி (IFSO) என்றும் அறியப்படுகிறார்.[1][2]வானூர்தி பாதுகாவலர்களை அந்தந்த நாட்டின் அரசால் நியமிக்கப்படுவார். வானூர்தி பாதுகாவலர் சீருடையின்றி, சாதாரண பயணிகள் போன்று, விமான ஓட்டியின் அறைக்கு வெளியே உள்ள முதல் வகுப்பில் பயணிப்பர். இவர்கள் விமானத்தில் தூங்காது, விழிப்புடன் இருப்பர். இந்த வானூர்தி பாதுகாவலர்கள் கைத் துப்பாக்கியில் தீப்பிடிக்காத வெடிக்காத இரப்பர் குண்டுகளை பயன்படுத்துவர்.

வரலாறு[தொகு]

வானூர்திக் கடத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிறுவனம் (FAA) மார்ச் 1962 முதல் தொடங்கியது. ஆஸ்திரியா 1981ஆம் ஆண்டு முதல் இச்சேவையைத் தொடங்கியது.1999இல் கந்தகார் விமானக் கடத்தல்[3]மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தியப் பயணிகள் விமானங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர், வான் பாதுகாவர்களாக நியமிக்கப்பட்டனர். [4] செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் ஆஸ்திரேலியா[5][6],17 செப்டம்பர் 2022 முதல் கனடா தனது விமானங்களில் வானூர்தி பாதுகாப்பு காவலர்களை நியமித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Clay Biles. How to Stop a Hijacking: Critical Thinking in Civil Aviation Security.
  2. "International In-flight Security Officer Committee". International In-flight Security Officer Committee. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.
  3. "Private airlines brace to meet hijack threats". The Times of India. 11 October 2001 இம் மூலத்தில் இருந்து 23 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523170949/http://articles.timesofindia.indiatimes.com/2001-10-11/mumbai/27236453_1_sky-marshals-jet-airways-private-airlines. 
  4. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/bureau-of-civil-aviation-security-weighs-exempting-pilots-from-briefings-by-sky-marshals/articleshow/58917251.cms?from=mdr Bureau of Civil Aviation Security weighs exempting pilots from briefings by sky marshals]
  5. "Air Security Officers: Making our skies safe". Platypus. No. 99. Australian Federal Police. July 2008. p. 34. Archived from the original on 5 December 2010. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
  6. "Budget 2002–2003: Counter Terrorism measures" (PDF). Commonwealth of Australia. 2002. பார்க்கப்பட்ட நாள் 10 January 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானூர்தி_பாதுகாவலர்&oldid=4022467" இலிருந்து மீள்விக்கப்பட்டது