வானவில் மரம்
வானவில் மரம் | |
---|---|
Eucalyptus deglupta bark | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. deglupta
|
இருசொற் பெயரீடு | |
Eucalyptus deglupta Blume[1] | |
வேறு பெயர்கள் [1] | |
|
வானவில் மரம் (Eucalyptus deglupta) என்பது யூகலிப்டஸ் எனப்படும் தைலமரமாகும்.[2] மின்டனோ பசை அல்லது வானவில் பசை என அழைக்கப்படும் ஒரு வித பல வண்ணப்பசை போன்ற திரவம் வெளிப்படுவதால் இவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.[3] இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரங்கள் பப்புவா நியூகினியா, பிலிப்பைன்சு ஆகிய நாடுகளிலும் காணப்படும் தைலமரத்தின் வகையாகும். இவை பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படும். வட அரைக்கோளங்களில் அரிதாகி வரும் எழுநூறு வகைத் தைல மரங்களில் நான்கு வகையான இனங்கள் வானவில் மர இனங்களாகும். இவை ஆஸ்திரேலியாவில் காணப்படுவதில்லை. இம்மரங்கள் பலவண்ணங்களில் குறிப்பாக நீலம், ஊதா, ஆரஞ்சு மற்றும் பழுப்பு வண்ணங்களில் காணப்படுகின்றன.
மரத்தின் முதுமைக்கு ஏற்ப புதுப்புது வண்ணங்களில் ஜொலிக்கும் இந்த மரங்கள், பெரும்பாலும் சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் பளிச்சிடுகின்றன. வெப்ப மண்டலங்களில் பச்சை, காபி நிறத்துடன் காட்சியளிப்பவை, மழைக்காலங்களில் வர்ணஜாலம் காட்டுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Eucalyptus deglupta". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி (WCSP). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ.
- ↑ "UFEI – SelecTree: A Tree Selection Guide". selectree.calpoly.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-29.
- ↑ "Rainbow Gums". Double Helix. CSIRO. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.