உள்ளடக்கத்துக்குச் செல்

வாதிரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாதிரியான்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பள்ளர்

வாதிரியான் அல்லது வாதிரியார் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவர்.‌ மள்ளர் சமூகத்தின் ஒரு பிரிவாக வாதிரியார் பட்டம் தாங்கிய மக்கள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் மற்ற மாவட்டங்களிலும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சில கோவில்களில் முதல்மரியாதையையும் பெற்று வருகின்றனர். சில இடங்களில் இவர்களை கோலியப் பள்ளர் அழைக்க படுகின்றனர்.


இச்சமூகத்தினர் தேவேந்திர குலத்தில் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.[1] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் (எண் 72), இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.

தொழில்

இச்சமூகத்தினர் பொதுவாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[2] இவர்கள் கப்பல் பாய்மர துணிகளை நெசவு செய்ய கூடியவர்கள் ஆவர்.இவர்கள் பண்டைய காலத்தில் நெசவு தொழிலில் மிகவும் வல்லமை படைத்வர்கள் என கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலூ கூறுகிறார். அது மட்டுமின்றி இந்த வாதிரியார்கள் நெய்யும் துணி பெயர் பள்ளா என்று கீரேக்கத்தின் வரலாறு குறிப்பிடுகிறது. சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.

வாழும் பகுதிகள்

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், சாயர்புரம் , பரமன்குறிச்சி, ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. தங்கவேலு செயகுமார், ed. (1999). நூலும் வாழ்வும்: வாதிரியார், நெசவாளர் சமூக வாழ்வியல் ஒரு ஆய்வு. நெய்தல் வெளியீடு. p. 164. பரமன்குறிச்சியில் நாடார்கள், தேவேந்திர குலத்தில் ஒரு பிரிவான வாதிரியார், பறையர், சக்கிலியர் ஆகியோர் வாழ்கின்றனர்
  2. குருசாமி, ed. (1999). தமிழர் பண்பாட்டு வரலாறு" ( தொகுதி இரண்டு). தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம். p. 75.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதிரியார்&oldid=3775462" இலிருந்து மீள்விக்கப்பட்டது