வாதக் காய்ச்சல்
வாதக் காய்ச்சல் | |
---|---|
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் நுண்ணுயிரி | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இதயவியல் |
ஐ.சி.டி.-10 | I00.-I02. |
ஐ.சி.டி.-9 | 390–392 |
நோய்களின் தரவுத்தளம் | 11487 |
மெரிசின்பிளசு | 003940 |
ஈமெடிசின் | med/3435 med/2922 emerg/509 ped/2006 |
பேசியண்ட் ஐ.இ | வாதக் காய்ச்சல் |
ம.பா.த | D012213 |
வாதக் காய்ச்சல் (Rheumatic fever) என்பது தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.[1] இந்நோய் பொதுவாக இதயம், மூட்டுக்கள், தோல் மற்றும் மனித மூளையைப் பாதிக்க கூடியது.[2]
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் என்னும் நுண்ணுயிரி (பாக்டீரியா) தொண்டையில் ஏற்படுத்தும் அழற்சியின் பிறகு இரண்டு அல்லது நான்கு வாரங்கள் கழித்து இந்நோய் ஏற்படக்கூடும்.[2] சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மூன்று சதவீதம் பேருக்கு இவ்விதமான வாதக் காய்ச்சல் வர வாய்ப்புண்டு.[3] இக்கிருமியை அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலம் முயலும்போது, அது உடலின் திசுக்களையே பாதிப்புக்குள்ளாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
[தொகு]- பெரியஅறிகுறிகள்
- வீக்கத்துடன் மூட்டு வலி (பன்மூட்டழற்சி)
- இதயத்திசு அழற்சி
- தோலுக்கடியில் சிறு கட்டிகள்
- தோல் சிவந்து போதல்
- கை, கால் நடுக்கம்
- சிறிய அறிகுறிகள்
- வீக்கமில்லா மூட்டு வலி
- காய்ச்சல்
- அழற்சி குறியீடுகள்
- இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாதல்
- மின் இதயத்துடிப்பு வரைவு (இசிஜி) மாறுபாடு
பாதிப்புகள்
[தொகு]இந்நோய் இதய வால்வுகளை குறிப்பாக ஈரிதழ் வால்வினை நிரந்தர பாதிப்புக்குள்ளாக்குகிறது. வளரும் நாடுகளில் இதன் தீவிரம் மிகுதியாக உள்ளது. இதயத்தில் உள்ள ஈரிதழ், மூவிதழ் மற்றும் மகாதமனியின் வால்வுகளில் சுருக்கம் அல்லது கசிவு ஏற்படலாம்.
சிகிச்சை
[தொகு]வாதக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெனிசிலின், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். வால்வு பாதிப்பு மிகுதியாக இருப்பின் அறுவைச்சிகிச்சைத் தேவைப்படலாம்.
தடுப்பு முறை
[தொகு]தொண்டை அழற்சியால் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாதக் காய்ச்சல் வராது தடுப்பதற்கு குறித்த காலம் வரை குறைந்த அளவில் பெனிசிலின் ஊசி அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee, KY; Rhim, JW; Kang, JH (March 2012). "Kawasaki disease: laboratory findings and an immunopathogenesis on the premise of a "protein homeostasis system".". Yonsei medical journal 53 (2): 262–75. doi:10.3349/ymj.2012.53.2.262. பப்மெட்:22318812.
- ↑ 2.0 2.1 Marijon, E; Mirabel, M; Celermajer, DS; Jouven, X (10 March 2012). "Rheumatic heart disease.". Lancet 379 (9819): 953–64. doi:10.1016/S0140-6736(11)61171-9. பப்மெட்:22405798.
- ↑ Ashby, Carol Turkington, Bonnie Lee (2007). The encyclopedia of infectious diseases (3rd ed.). New York: Facts On File. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7507-2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Spinks, A; Glasziou, PP; Del Mar, CB (5 November 2013). "Antibiotics for sore throat.". The Cochrane database of systematic reviews 11: CD000023. doi:10.1002/14651858.CD000023.pub4. பப்மெட்:24190439.