உள்ளடக்கத்துக்குச் செல்

வாசு பிரிம்லானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசு பிரிம்லானி
பணிநகைச்சுவையாளர்
வலைத்தளம்
www.vasuprimlani.com

இரீது வாசு பிரிம்லானி (Ritu Vasu Primlani) ஒரு இந்திய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். இவரது பணிக்காக 2015 நாரி சக்தி விருதை இந்திய அரசிடமிருந்து பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரிம்லானி இந்தியாவின் புது தில்லியில் வளர்ந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல், நகர திட்டமிடல் மற்றும் சட்டம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1]

இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து நாரி சக்தி விருதைப் பெற்ற வாசு பிரிம்லானி.

இவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலராகவும் உள்ளார். மேலும் ஐந்து அரை மாரத்தான்கள், இரண்டு ஒலிம்பிக்-தூர டிரையத்லான்கள், ஒரு அரை அயர்ன்மேன் மற்றும் ஒரு ஸ்பிரிண்ட் டிரையத்லான் ஆகிய சாதனைகளை புரிந்துள்ளார்.[2] தற்போது தில்லியைச் சேர்ந்த இவர் ஒரு உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பவராக இருக்கிறார். [3]

தொழில்[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்படும் "சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள்" என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு உணவகங்களுக்கான சுற்றுச்சூழல் ஆலோசனை சேவைகளை வழங்கியது. மேலும் இது 2003இல் கலிபோர்னியா ஆளுநர்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார தலைமைத்துவ விருதைப் பெற்றது. [4] [5] மேலும், உணவகங்களுடனான தனது பணிக்காக இவர் அசோகா கூட்டாளராக நியமிக்கப்பட்டார். [6] இவரது இந்தஅமைப்பு 2003 இல் ஒரு அமெரிக்க இபிஏ பிராந்திய 9 விருதையும் பெற்றது. [7]

சர்ச்சை[தொகு]

சூலை 2014 இல், பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சாலுமரத திம்மக்காவால் அமெரிக்காவிலிருந்து பணம் பெற தனது பெயரைப் பயன்படுத்தியதற்காக இவர் மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டார். [8] [9] திம்மக்காவின் கூற்றுப்படி, அமெரிக்காவில் சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் நிறுவனத்தை அமைத்தபோது பிரிம்லானி அவரது பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பிரிம்லானியின் கூற்றுப்படி, திம்மக்கா, ஒரு நூற்றாண்டுக்கு, தனது பெயரைப் பயன்படுத்த பிரிம்லானிக்கு ஒப்புதல் அளித்ததை மறந்துவிட்டார் எனத் தெரிகிறது. [10]

கலிபோர்னியாவின் ஆளுநரிடமிருந்து ஒரு விருதைப் பெற்ற இரீது வாசு பிரிம்லானி

நியூயார்க்கு நகரம், சான் பிரான்சிஸ்கோ, மும்பை, துபாய், பெங்களூர், ஐதராபாத்து, சண்டிகர், புனே, தில்லி உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பெறுநிறுவனங்களிலும், நகைச்சுவை அரங்கங்களிலும் இவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [11] [12] மேலும், பாலியல் வன்முறை [13] போன்ற தைரியமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் தனது நகைச்சுவை மூலம் சமூக செய்திகளை வெளிபடுத்துகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indias first openly gay comic, Vasu Primlani relives her memories of being raped as a child and serving time in jail". India Today. 27 January 2016. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  2. "Stand-up comedian, environmentalist, triathlete and somatic therapist: Meet Vasu Primlani, the woman who does it all | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 2016-05-22. http://www.dnaindia.com/lifestyle/report-stand-up-comedian-environmentalist-triathlete-and-somatic-therapist-meet-vasu-primlani-the-woman-who-does-it-all-2215106. 
  3. "A mode of healing that goes bone-deep to repair | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 2017-01-22. http://www.dnaindia.com/health/report-a-mode-of-healing-that-goes-bone-deep-to-repair-2294883. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-23. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.
  5. "Vasu Primlani | I Inspire 2018". i-inspire.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-21.
  6. http://usa.ashoka.org/fellow/ritu-primlani
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.
  8. "Cops to Question Comic Ritu in Thimmakka Case". The New Indian Express.
  9. "NRI accused of misusing Thimmakka's name". The Hindu. 14 May 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/nri-accused-of-misusing-thimmakkas-name/article6006991.ece. 
  10. Bureau, Bangalore Mirror (19 July 2014). "Stand-up comedian accused of cheating activist detained on her way to the US". Bangalore Mirror.
  11. FUNNY GIRLS. 12 August 2012.
  12. "Indian Men hahaha". The Mint. http://www.livemint.com/Leisure/1fhtCpF89x7W7866PMaaMK/Indian-men-Ha-ha-ha.html. 
  13. "Rape: What We Don't Know About It". Live Mint. http://www.livemint.com/Leisure/RXGnv5jMGHA8Gxo1QYTTrI/Rape-what-we-dont-know-about-it.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசு_பிரிம்லானி&oldid=3571142" இலிருந்து மீள்விக்கப்பட்டது