வாசிலிகி கலோகரா
வாசிலிகி கலோகரா Vassiliki Kalogera | |
---|---|
தேசியம் | கிரேக்கர் |
துறை | ஈர்ப்பு அலைகள் |
பணியிடங்கள் | வடமேற்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தெசலோனிகி பல்கலைக்கழகம் |
விருதுகள் | வானியற்பியலுக்கான தான்னீ கீனமன் பரிசு (2018) ஏன்சு பெத்தே பரிசு (2016) மரியா கோயப்பெர்ட் மேயர் விருது (2008) வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (2002) |
துணைவர் | பிரெடு இராசியோ |
இணையதளம் Northwestern University | |
குறிப்புகள் | |
இயக்குநர், சீரா (CIERA), வடமேற்கு பல்கலைக்கழகம் |
வாசிலிகி கலோகரா (Vassiliki Kalogera) ஒரு கிரேக்க வானியற்பியலாளர் ஆவார்.[1] இவர் வடமேற்கு பலகலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார்.[2] இவர் வானியற்பியல் பலதுறைத் தேட்ட, ஆராய்ச்சி மைய (சீரா- CIERA) இயக்குநர் ஆவார்.[3] இவர் 2015 இல் ஈர்ப்பு அலைகளை நோக்கிய லிகோ (LIGO ) கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவார்.
இவர் ஈர்ப்பு அலைகள், செறிந்த இரும வான்பொருள்கள் X-கதிர்கள் உமிழ்வு, நொதுமி இரும விண்மீன்களின் இணைவு ஆகிய ஆய்வுகளில் முன்னணிக் கோட்பாட்டாளர் ஆவார்.
இளமையும் கல்வியும்
[தொகு]இவர் 1992 இல் தெசலோனிகி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார்.[4] இவர் உர்பானா சாம்பைனில் உள்ள இல்லினாயிசு பல்கலைக்கழக பட்டமேற்படிப்புப் பள்ளியில் சேர்ந்து 1997 இல் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் CfA முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்தார்; இவர் 2000 இல் கிளே ஆய்வுநல்கையையும் பெற்றார். இவர் 2001 இல் வடமேற்கு பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் 2002 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வழங்கப்பட்டது. இது முதுமுனைவர் ஆய்வில் தன்னிகரற்ற சாதனை படைத்த பெண்களுக்கு வழங்கப்படுகிறது.[5]
இவர் 2008 இல் இவரது செறிந்த இரும வான்பொருள்களின் படிமர்ச்சியும் அறுதி முடிவும் சார்ந்த ஆய்வுக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் மரியா கோயப்பர்ட் மேயர் விருது வழங்கப்பட்டது.[4]
இவருக்கு 2016 இல் செறிந்த இரும வான்பொருள்கள் உமிழும் மின்காந்த, ஈர்ப்பு அலைக் கதிர்வீச்சுகளின் ஆய்வுப் பங்களிப்புகளுக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஏன்சு பெத்தே பரிசு வழங்கப்பட்டது.[6]
இவர் 2018இல் இவரது வானியற்பியல் அமைப்புகளாகிய கருந்த்ளை, நொதுமி விண்மீன்கள், வெண்குறுமீன்கள் ஆய்வுக்காக வானியற்பியலுக்கான தான்னீ கைன்மன் பரிசு வழங்கப்பட்டது.[7]
கலோகரா பெரும்பொது அளக்கைத் தொலைநோக்கி குழுமத்தில் பணிபுரிகிறார். இவர் 2018 மே மாதம் அமெரிக்கத் தேசிய அறிவியல் கலவிக்கழகத்துக்குத் தேர்வானார்.
ஆய்வும் பணியும்
[தொகு]இவர் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறையில் ஈ. ஓ. ஏவன் கட்டில் பேராசிரியராக உள்ளார். இவர் வானியற்பியல் பல்துறை தேட்டம், ஆராய்ச்சி மையத்தின் (CIERA) இயக்குநராகப் பணிபுரிகிறார். இவரது அண்மைய ஆராய்ச்சி[8] கோட்பாட்டு வானியற்பியலில் லிகோ கண்டுபிடிக்கும் ஈர்ப்பு அலைகள், X-கதிர் இரும விண்மீன்களின் படிம உருவாக்கம், பெரும்பொது அளக்கைத் தொலைநோக்கி, மீவிண்மீன் வெடிப்புகளின் முன்வாயில்களை முற்கணித்தல் ஆகிய ஆய்வுகளில் ஈடுபடுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "VICKY KALOGERA - Greek astrophysicist awarded with the Hans Bethe Prize". www.ellines.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
- ↑ "Vicky Kalogera: Department of Physics and Astronomy - Northwestern University". www.physics.northwestern.edu. Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
- ↑ "CIERA". பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
- ↑ 4.0 4.1 4.2 "Prize Recipient". www.aps.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
- ↑ "Annie Jump Cannon Award in Astronomy | American Astronomical Society". aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
- ↑ "Hans Bethe Prize". பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
- ↑ "Vicky Kalogera wins 2018 Dannie Heineman Prize for Astrophysics". Archived from the original on 2018-09-16.
- ↑ "Kalogera Research Group". Archived from the original on 2016-12-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.