உள்ளடக்கத்துக்குச் செல்

வாங் சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாங் சாங் (Wang Chong, கிபி 27 – அண். கிபி 100),[1] என்பவர் ஆன் பேரரசில் முனைவாகச் செயல்பட்ட ஒரு சீன, பொருள்முதல்வாத மெய்யியலாளர் ஆவார். இவர் சமயநீக்க, பகுத்தறிவு, இயற்கைவாதம் சார்ந்த எந்திரவியலான உலகப் பார்வையை உருவாக்கினார். அண்டத்தின் தோற்றத்துக்கான பொருள்முதல்வாத விளக்கத்தை முன்வைத்தார்.[2] இவரது முதன்மையான நூல் "லூனெங்கு" ("உய்யநிலை உரைகள்") ஆகும். இந்த நூல் தொடக்கநிலை வானியல், வானிலையியல் பற்றிய கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. சீன வரலாற்றிலேயே இவர்தான் முதன்முதலாக சங்கிலி எக்கி அல்லது தொடர்வரிசை எக்கியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு அது சீனாவில் பாசனத்திலும் பொதுப்பணிகளிலும் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.[3] மேலும் நீர் சுழற்சியைப் பற்றி இவர் துல்லியமாக விளக்கியுள்ளார்.

இவர் மற்ற சீன மெய்யியலாரைப் போன்றல்லாமல் தானே உருவாக்கிக் கொண்ட வறுமையில் வாழ்ந்துள்ளார். இவர் நூல்பேழைகளிடம் நின்றபடியே படிப்பாராம். இவருக்கு நல்ல நினைவாற்றல் இருந்துள்ளது. எனவே இவர் சீனச் செவ்வியல் நூல்களில் நல்ல புலமை பெற்றுள்ளார். மேலும் இவர் மாவட்டச் செயலாள ர்வரை பதவியில் உயர்ந்துள்ளார். என்றாலும் தன் அதிகார எதிர்ப்புப் போக்கால் அதை இழந்துவிட்டுள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

வாங் இக்கால ழேசியாங் மாவட்ட, இழ்சாங்யூ எனும் இடத்தில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தார்.[1] வாங் சாங்கின் மகனான இவர் தன் தந்தையின் பேரில் காட்டிய பாச உறவுக்கும் அன்புக்கும் ஊர்மக்களால் மதிக்கவும் வியக்கவும் பட்டுள்ளார்.[1] பெற்றோர்களின் விருப்பப்படி, வாங் பேரரசுப் பல்கலைக்கழகத்தில் படிக்க கிழக்கு ஆன் தலைநகரான இலியூயாங்கிற்குப் பயணம் மேற்கொண்டார்.[1] அங்குதான் இவர் பான் பியாவோ (கிபி 3-54) என்ற பெயர்பெற்ற வரலாற்றறிஞருடன் பழகத் தொடங்கினார். அப்போது பின்னவர் ஆன் பேரரசின் நூலை எழுதத் தொடங்கியிருந்துள்ளார்.[1] இவர் ஆன் பேரரசு நூலுக்குத் தானும் பங்களிப்பு ஆற்றியுள்ள அவரது மகனான பான் பூ என்பவருடன் நட்பு பூண்டார். வறுமையால் அவரிடம் பணம் ஏதும் இல்லாமையால் இவர் பல புத்தகக் கடைகளுக்கு அடிக்கடிச் சென்று படித்து அறிவைப் பெற்றுள்ளார்.[1] மேலும் ராஃப் டி கிரெசுப்பிக்னி என்பவர் எழுதுகிறார்: அப்படி பயிலும்போது உவான் தான் போன்ற அக்காலச் செவ்வியல் பனுவல் நடப்பியல்வாதிகளால் பெருந்தாக்கமுற்றுள்ளார் (இறப்பு: 28).[4] இவர் தனது எளிமையால், அறிவுத்திறமை ஏதும் பெறாமல் தமது அதிகாரத்தாலும் செல்வச் செருக்காலும் பெருமைபட்டுக்கொண்ட அலுவலர்களைப் பற்றி வருத்தப்பட்டுள்ளார்.[1]

வாங் ஊருக்குத் திரும்பிவந்து அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] அலுவலராக உயர்வும் பெற்றாலும் அவரது நுண்வாதத்தாலும் தருக்கிச் சண்டையிடும் பங்காலும் பதவியில் இருந்து விலகினார்.[1] இந்த ஓய்வுக்குப் பிறகு தனித்துவிடப்பட்ட வாங் மெய்யியல் உரைகளை எழுதலானார். அவரது ஜிசு ("அறம் குறித்து"), ஜெய்வி ("ஒறுப்புகள்"), செங் வு ("அரசு பற்றி"), யான்சிங் சூ ("நுண்ணுயிரினம் குறித்து") போன்ற 80 கட்டுரைகளை எழுதினார்.[1] இவை பிறகு அவரது லூன்கெங் ("சமன்கோலில் சீர்தூக்கிய உரைப்பொழிவுகள்") என்ற நூலில் தொகுக்கப்பட்டன.[1]

அவர் தானே வரித்துக்கொண்ட ஓய்வில் இருந்தபோதும், யாங் மாநிலத் தலைமையக அலுவலராகப் பணிபுரிய டாங் குவின் ஆய்வாளரால் அழைக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்டார்.[5] என்றாலும் வாங் இதில் இருந்தும் பதவி விலகியுள்ளார்.[5] பலகாலமாக ஆய்வாளராகவும் அலுவலராகவும் இருந்த வாங் சாங்கின் நண்பரான சீயீ யிவூவின் அலுவல்முறைப் பரிந்துரைபேரில் ஆன் பேரரசர் ழாங்கின் (75-88) அவை முதுநிலை புலமையாளராகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.[6] பேரரசர் ழாங் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். தன் அவைக்கு வருமாறும் கூறியுள்ளார். இருந்தாலும் வாங் தான் உடல்நலமின்றி இருப்பதாகக் கூறிச் செல்ல மறுத்துவிட்டார்.[6] பிறகு வாங் தன் வீட்டில் 100ஆம் ஆண்டளவில் இயற்கை எய்தினார்[1]

அவரது காலத்தில் வாங்கின் பகுத்தறிவு சார்ந்த மெய்யியலும் கன்பூசியப் புதுப்பனுவல் குறித்த உய்யநிலை உசாவலும் பெரிதும் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், அவரது வாழ்நாளுக்குள்ளேயே, பெயர்பெற்ற அலுவலரும் பின்னாளைய புலமையாளருமான சை யாங் (132–192) வாங்கின் எழுத்துகளின் மேன்மையைப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.[7] வாங் இலாங் என்ற அலுவலர் (இ. 228) வாங்கின் லூன்கெங் நூற்படியை வாங்கி, அதை 198 ஆம் ஆண்டுப் பயணத்தின்போது தன்னுடன் சியூசாங்கில் முதன்மை அமைச்சர் சாவோ சாவோவால் (155–220) நிறுவப்பட்ட அவைக்குக் கொண்டு வந்துள்ளார்.[7] கன்பூசியப் புதுப்பனுவலின் சில கேள்விக்குரிய பகுதிகள் மெல்ல வழக்கிழந்தன. பெருமையுமிழந்தன. ராஃப் டி கிரெசுப்பிக்னி கூறுகிறார்: வாங் சாங்கின் பகுத்தறிவியலான மெய்யியல் பிறகு சீனச் சிந்தனையில் பெருந்தாக்கம் செலுத்தியது.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 Crespigny, 806.
  2. The Cambridge Companion to Atheism, p. 228, கூகுள் புத்தகங்களில்
  3. Needham, Volume 4, Part 2, 344
  4. Crespigny, 338.
  5. 5.0 5.1 Crespigny, 152 806.
  6. 6.0 6.1 Crespigny, 806 & 895.
  7. 7.0 7.1 7.2 Crespigny, 807.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்_சாங்&oldid=3578710" இலிருந்து மீள்விக்கப்பட்டது