உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்சுடாஃப் பகாஎண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்சுடாஃப் பகாஎண்
நினைவுப் பெயர்சாமுவேல் எஸ் வாக்சுடாஃப் இளையவர்
வெளியீட்டு ஆண்டு1989[1]
வெளியீட்டாளர்பாட்மன் பி. டி, ஜான் செல்பிரிட்ஜ், சாமுவேல் எஸ். வாக்சுடாஃப் இளையவர்.
அறியப்பட்ட குறிச்சொற்களின் எண்ணிக்கை44
முதல் உறுப்புகள்3, 11, 43, 683
அறியப்பட்ட மிகப்பெரிய உறுப்பு(2138937+1)/3
OEIS குறியீடுA000979

எண்கோட்பாட்டில், வாக்சுடாஃப் பகாஎண் (Wagstaff prime) என்பது,

(p ஒரு ஒற்றைப்படைப் பகா எண்) வடிவிலமைந்த பகாஎண்ணாகும்.

இப்பகாஎண்கள், "சாமுவேல் எஸ் வாக்சுடாஃப் இளையவர்" என்ற அமெரிக்கக் கணிதவியலாளரின் பெயரால் அழைக்கப்படுகின்றன. வாக்சுடாஃப் பகாஎண்கள் புதிய மெர்சென் அனுமானத்தில் இடம்பெற்றுள்ளன; இவை குறியாக்கவியலில் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

முதல் மூன்று வாக்சுடாஃப் பகாஎண்கள்: 3, 11, 43

அறியப்பட்ட வாக்சுடாஃப் பகாஎண்கள்

[தொகு]

முதல் வாக்சுடாஃப் பகாஎண்கள் சில:

3, 11, 43, 683, 2731, 43691, 174763, 2796203, 715827883, 2932031007403, 768614336404564651, … (OEIS-இல் வரிசை A000979)


அக்டோபர் 2023 வரை வாக்சுடாஃப் பகாத்தனிகளைத் தரக்கூடிய அடுக்கெண்கள்:

3, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 43, 61, 79, 101, 127, 167, 191, 199, 313, 347, 701, 1709, 2617, 3539, 5807, 10501, 10691, 11279, 12391, 14479, 42737, 83339, 95369, 117239, 127031, 138937[2] (அறியப்பட்ட அனைத்து வாக்சுடாப் பகாஎண்கள்)
141079, 267017, 269987, 374321, 986191, 4031399, …, 13347311, 13372531, 15135397 (சாத்தியமான வாக்சுடாப் பகாஎண்கள்) (OEIS-இல் வரிசை A000978)


பிப்ரவரி 2010 இல் டோனி ரெயிக்சு கீழுள்ள சாத்தியமான வாக்சுடாப் பகாஎண்ணைக் கண்டுபிடித்தார்:

இப்பகாஎண் 1,213,572 இலக்கங்களுடையது; மேலும் அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் மூன்றாவது பெரிய வாக்சுடாஃப் பகாஎண்ணாகும்.[3]

செப்டம்பர் 2013 இல் ரியான் பிராப்பர் என்பவர் மேலும் இரு சாத்தியமான வாக்சுடாஃப் பகாஎண்களைக் கண்டுபிடித்து அறிவித்தார்:[4]

இவை ஒவ்வொன்றும் 4 மில்லியனுக்கும் சற்று அதிகமான தசம இலக்கங்களைக் கொண்டவை. 4031399, 13347311 இரண்டுக்கும் இடைப்பட்ட அடுக்கெண்கள் எதுவும் சாத்தியமான வாக்சுடாஃப் பகாஎண்களைத் தரக்கூடியவாக உள்ளனவா என்பது அறியப்படவில்லை.

மீண்டும் ஜூன் 2021 இல் ரியான் பிராப்பர் மேலுமொரு சாத்தியமான வாக்சுடாப் பகாஎண்ணைக் கண்டுபிடித்தார்:[5]

இப்பகாஎண்ணின் தசம இலக்கங்கள் 4.5 மில்லியனை விடச் சற்றுக் கூடுதலாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Paul T. Bateman; John Selfridge; Wagstaff, Jr., S. S. (1989). "The New Mersenne Conjecture". American Mathematical Monthly 96: 125–128. doi:10.2307/2323195. https://archive.org/details/sim_american-mathematical-monthly_1989-02_96_2/page/125. 
  2. "The Top Twenty: Wagstaff".
  3. "Henri & Renaud Lifchitz's PRP Top records". www.primenumbers.net. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  4. New Wagstaff PRP exponents, mersenneforum.org
  5. Announcing a new Wagstaff PRP, mersenneforum.org

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்சுடாஃப்_பகாஎண்&oldid=4108020" இலிருந்து மீள்விக்கப்பட்டது