உள்ளடக்கத்துக்குச் செல்

வாகூர் அணை

ஆள்கூறுகள்: 20°55′36″N 75°42′35″E / 20.9265685°N 75.709767°E / 20.9265685; 75.709767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகூர் அணை
வாகூர் அணை வாகூர் ஆற்றில்
வாகூர் அணை is located in மகாராட்டிரம்
வாகூர் அணை
மகாராட்டிராவில் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்வாகூர் அணை D02985
அமைவிடம்ரெய்பூர் கிராமம் (ஜல்காவ்)
புவியியல் ஆள்கூற்று20°55′36″N 75°42′35″E / 20.9265685°N 75.709767°E / 20.9265685; 75.709767
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஅணை
தடுக்கப்படும் ஆறுவாகூர் ஆறு
உயரம்13.6 m (45 அடி)
நீளம்690 m (2,260 அடி)
கொள் அளவு70 km3 (17 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு8.5 டி. எம். சி.
மேற்பரப்பு பகுதி467 km2 (180 sq mi)

வாகூர் அணை (Waghur Dam) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் கந்தாரி மற்றும் வரதிம் அருகே வாகூர் ஆற்றில் அமைந்துள்ள ஒரு மண் நிரப்பு அணையாகும்.[1]

வாகூர் ஆறு அஜந்தா குகைகள் அருகிலுள்ள அதன் மூலத்திலிருந்து காந்தேசு பகுதி வழியாகப் பாய்கிறது. இங்குப் புகழ்பெற்ற உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இந்த பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகள் மகாராட்டிராவின் நீர்வளத் துறையால் எடுக்கப்பட்டு 1978இல் கட்டுமானம் தொடங்கியது.[2] அணையின் முக்கிய நோக்கம் கீழ்நிலைப் பகுதியில் நீர்ப்பாசன நோக்கத்திற்காகத் தண்ணீரை வழங்குவதாகும். பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளில் கால்வாய்கள் கட்டப்பட்டன. 2006ஆம் ஆண்டில், வாகூர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சாதனை மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டது. அணையின் மீது சுமார் 40 டி. எம். சி தண்ணீர் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டு நிலவரப்படி, அணையின் நீர்த்தேக்கம் 8.5 டி. எம். சி சேமிப்பு திறனைக் கொண்டிருந்தது.

அணைக்குக் கூடுதலாக இருபது கசிவு வாயில்கள் திட்டமிடப்பட்டன. இதனால் சேமிப்பு திறன் ஒன்றரை டி. எம். சி அதிகரித்துள்ளது. சுமார் 500 ஆயிரம் மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், வறட்சியால் பாதிக்கப்படும் சுமார் 64,000 ஏக்கர் ( சதுர கிலோமீட்டர்) நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதும் இந்தத் திட்டமாகும்.

விவரக்குறிப்புகள்

[தொகு]

அணையின் உயரம் 13.6 மீட்டராகும். இதன் நீளம் 690 மீட்டர். அணையின் நீர்த்தேக்க கொள்ளளவு 8.5 டி. எம்.. சி.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Waghur D02985". Archived from the original on July 15, 2015. Retrieved March 20, 2013.
  2. "Waghur Major Irrigation Project JI00467". Archived from the original on June 19, 2018. Retrieved March 20, 2013.
  3. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. Retrieved 2010-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகூர்_அணை&oldid=4155277" இலிருந்து மீள்விக்கப்பட்டது