வழிமுறைக் கலைஞர் (நடன ஆசிரியர்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வழிமுறைக் கலைஞர் என்பவர்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டியக் கலையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டவர்கள். பரம்பரைக் கலைஞர்கள் என்றும் இவர்களை அழைப்பர். இவர்கள் இசை வேளாளர் மரபில் வந்தவர்கள்.
தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர் காலம் கி.பி.19- ஆம் நூற்றாண்டு. அக்காலம் முதல் பல பரம்பரைக் கலைஞர்கள் நாட்டிய அரங்க நிகழ்ச்சி முறைகளைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
இத்தகு பரம்பரைக் கலைஞர்கள் வழிவந்தோரில் ஒரு சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள்,
- பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,
- தஞ்சாவூர் பாப்பம்மாள்
- காஞ்சிபுரம் எல்லப்பா பிள்ளை
- திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை
- திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை
- கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
- காட்டுமன்னார் கோயில் முத்துக்குமாரபிள்ளை
- வழுவூர் பி. இராமையா பிள்ளை
- தஞ்சாவூர் கே.பி. கிட்டப்பாபிள்ளை
- மயிலாப்பூர் கௌரியம்மாள்
- தஞ்சாவூர் பாலசரஸ்வதி
- வழுவூர் சாம்ராஜன்
- சுவாமிமலை கே. ராஜரத்தினம்
- கே. ஜே. சரசா
- தஞ்சாவூர் ஹேரம்பநாதன்