உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளத்தோள் நாராயண மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வள்ளத்தோல் நாராயண மேனன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வள்ளத்தோள் நாராயண மேனன்
வள்ளத்தோல் நாராயண மேனன்
வள்ளத்தோல் நாராயண மேனன்
பிறப்புவள்ளத்தோல் நாராயண மேனன்
(1878-10-16)16 அக்டோபர் 1878
திரூர், கேரளம்
இறப்புமார்ச்சு 13, 1958(1958-03-13) (அகவை 79)
தொழில்மகாகவிஞர்,
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்என்ட குருநாதன்

வள்ளத்தோல் நாராயண மேனன் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் உள்ளூர் பரமேசுவர அய்யர் மற்றும் குமரன் ஆசான் ஆவர். கேரள கலாமண்டலத்தை நிறுவியவர். இந்திய அரசின் பத்ம பூசண் விருது 1955ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

1878 அக்டோபர் 16-அன்று கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் அருகே சென்னாரா என்றவிடத்தில் பிறந்தார். சமசுகிருதம் மற்றும் ஏரணம் படித்தார். 1905-இல் துவங்கிய வால்மீகி இராமாயண மொழிபெயர்ப்பை 1907-இல் முடித்தார். 1915-இல் சித்திரயோகம் வெளியிட்டார். இக்காவியத்தைப் பாராட்டி இவருக்கு மகாகவி என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. அந்த ஆண்டே கேரளோதயம் இதழின் அதிபரானார். கதக்களியின் மறுமலர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டார். 1958 மார்ச் 13-அன்று தமது 79ஆம் அகவையில் மரணமடைந்தார்.

அவரது பாடல்கள் நாட்டுப்பற்று மற்றும் சமூகநீதியை வலியுறுத்தி அமைந்திருந்தன. காதுகேளாமையால் தாமடைந்த இன்னல்களையும் கவிதையாக வடிவெடுத்தார்.

அவரது படைப்புகள்

[தொகு]

குறிப்பிடத்தக்க சில:

  • சித்திரயோகம்(1914)
  • மக்டலெனா மாரியம் (Mary Magdalene, 1921)
  • கொச்சு சீதா (1928)
  • சாகித்யமஞ்சரி - அவரது காதல்கவிதைகளின் தொகுப்பு

வள்ளத்தோலின் படைப்புகள் ஆங்கிலம்,உருசியன் மற்றும் இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கேரள கலாமண்டலம்

[தொகு]

வள்ளத்தோல் நாராயணமேனன் மலையாள தொன்ம கலைகளை வளர்த்தெடுக்க ஆற்றிய முதன்மையான பணி கேரளகலாமண்டலம் என்னும் கலாசாலையை நிறுவியதுதான். தமது 49ஆம் அகவையில் தாம் பார்த்த கதக்களி நாட்டிய நாடகத்தின் குறைந்த தரம் அவரை பழங்கலைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. உடன்கருத்துக் கொண்டவர்களின் துணையுடன் 1927ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் கேரள கலாமண்டலம் என்ற நிறுவனத்தை பதிவு செய்தார். இதனை வளர்க்க நிதிவேண்டி மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார். கேரள அரசின் உதவியோடு லாட்டரியும் நடத்தி பணம் திரட்டினார். பின்னர் தமது நண்பர் மணக்குளம் முகுந்தராசா வழங்கிய பாரதப்புழை ஆற்றின் கரையில் செருதுருத்தி என்ற இடத்தில் இக்கலாசாலையை அமைத்தார். தாமும் அங்கேயே வசிக்கத் துவங்கினார். இவரது நினைவாக இவ்விடம் தற்போது வள்ளத்தோல் நகர் என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.

ஆக்கங்கள்

[தொகு]
நூல் வெளியிட்டோர் ஆண்டு
அச்சனும் மகளும் மங்களோதயம் - திருச்சூர் 1936
அபிவாத்யம் வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1956
அல்லாஹ் - 1968
இந்தியயுடெ கரச்சில் வெள்ளினேழி-பாலக்காடு 1943
ருதுவிலாசம் வித்யாவிலாசம் - கோழிக்கோடு 1922
என்றெ குருநாதன் வெள்ளினேழி-பாலக்காடு 1944
ஒரு கத்து அதவா ருக்மியுடெ பஸ்சாத்தாபம் ஏ. ஆர். பி - குன்னங்குளம் 1917
ஓணப்புடவ வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1950
ஔஷதாஹரணம் மங்களோதயம் - திருச்சூர் 1915
காவ்யாம்ருதம் ஸ்ரீராமவிலாசம்-கொல்லம் 1931
கைரளீகடாக்‌ஷம் வி. பி - திருவனந்தபுரம் 1932
கைரளீகந்தளம் சுந்தரய்யர் அன்டு சண்ஸ் - திருச்சூர் 1936
கொச்சுசீத மங்களோதயம் - திருச்சூர் 1930
கோமள சிசுக்கள் பாலன் - திருவனந்தபுரம் 1949
கண்டக்ருதிகள் வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1965
கணபதி ஏ. ஆர். பி - குன்னங்குளம் 1920
சித்ரயோகம் அதவா தாராவலீ சந்திரசேனம் லட்சுமீசகாயம் - கோட்டைக்கல் 1914
தண்டகாரண்யம் வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1960
திவாஸ்வப்னம் பி. கே.-கோழிக்கோடு 1944
நாகில வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1962
பத்மதளம் கமலாலயம் - திருவனந்தபுரம் 1949
பரலோகம் வெள்ளினேழி - பாலக்காடு
பதிரவிலாபம் லட்சுமீச்காயம்-கோட்டைக்கல் 1917
பந்தனஸ்தனாய அனிருத்தன் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1918
பாப்புஜி வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1951
பகவல்ஸ்தோத்ரமால வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1962
மக்தலனமறியம் அதவா பஸ்சாத்தாபம் - 1921
ரண்டட்சரம் சரஸ்வதீ விலாசம்-திருவனந்தபுரம் 1919
ராட்சசக்ருத்யம் எஸ்.வி-திருவனந்தபுரம் 1917
வள்ளத்தோளின்றெ கண்டகாவ்யங்ஙள் மாத்ருபூமி-கோழிக்கோடு 1988
வள்ளத்தோளின்றெ பத்யக்ருதிகள் ஒன்னாம் பாகம் சாகித்யப்ரவர்த்தக சககரணசங்கம்-கோட்டயம் 1975
வள்ளத்தோளின்றெ பத்யக்ருதிகள் இரண்டாம் பாகம் சாகித்யப்ரவர்த்தக சககரணசங்கம்-கோட்டயம் 1975
வள்ளத்தோள் கவிதகள் டி.ஸி.புக்ஸ்-கோட்டயம் 2003
வள்ளத்தோள் சுத வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1962
விலாசலதிக எ.ஆர்.பி-குன்னங்குளம் 1917
விஷுக்கணி வள்ளத்தோள் கிரந்தாலயம் - செறுதுருத்தி 1941
வீரஸ்ருங்கல வி.சுந்தரய்யர் அன்ட் சண்ஸ்-திருச்சூர்
சரணமய்யப்பா வள்ளத்தோள் கிரந்தாலயம்-செறுதுருத்தி 1942
சிஷ்யனும் மகனும் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1919
சாகித்யமஞ்சரி-முதலாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1918
சாகித்யமஞ்சரி-இரண்டாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1920
சாகித்யமஞ்சரி-மூன்றாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1922
சாகித்யமஞ்சரி-நான்காம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1924
சாகித்யமஞ்சரி-ஐந்தாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1926
சாகித்யமஞ்சரி-ஆறாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1934
சாகித்யமஞ்சரி-ஏழாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1935
சாகித்யமஞ்சரி-எட்டாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1951
சாகித்யமஞ்சரி-ஒன்பதாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1959
சாகித்யமஞ்சரி-பத்தாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1964
சாகித்யமஞ்சரி-பதினொன்றாம் பாகம் எ.ஆர்.பி-குன்னங்குளம் 1970
ஸ்த்ரீ வள்ளத்தோள் கிரந்தாலயம்-செறுதுருத்தி 1944
றஷ்யயில் வள்ளத்தோள் கிரந்தாலயம்-செறுதுருத்தி 1951
கிரந்தவிசாரம் மங்களோதயம்-திருச்சூர் 1928
ப்ரசங்கவேதியில் வள்ளத்தோள் கிரந்தாலயம்-செறுதுருத்தி 1964
வள்ளத்தோளின்றெ க்ரந்தனிரூபணங்ஙளும் பிரசங்கங்ஙளும் மாத்ருபூமி-கோழிக்கோடு 1986

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளத்தோள்_நாராயண_மேனன்&oldid=3293228" இலிருந்து மீள்விக்கப்பட்டது