உள்ளடக்கத்துக்குச் செல்

வளைவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவிவாடியில் ஒளித் தெறிப்பு

வளைந்த ஒளி தெறிக்கும் மேற்பரப்பைக் கொண்ட ஆடிகளே வளைவாடி எனப்படும். இவை குழிவாடியாகவோ அல்லது குவிவாடியாகவோ இருக்கலாம். இவை பல ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் சாதாரண பிரயோகங்கள் மற்றும் பயன்களைக் கொண்டவை. இவற்றின் குவியற்தூரம், வளைவுத் தூரம் மற்றும் பொருளின் தூரத்துக்கமைய இவற்றின் தெறிப்பியல்புகள் வேறுபடும். இவை வில்லைகளைப் போல் வெவ்வேறு அலைநீளமுடைய கதிர்களை வெவ்வேறு விதமாக குவிக்காமல் ஒரே சீராகத் தெறிப்படையச் செய்வது இவற்றின் அனுகூலமாகும்.[1][2][3]

குழிவாடி

[தொகு]

தெறிப்படைய வைக்கும் மேற்பரப்பை உட்பகுதியாகக் குழிவடையும்படி இருக்கும் ஆடி குழிவாடி ஆகும். இவை ஒளிக்கதிர்களைக் குவிய வைக்கும் தன்மையுடையவை ஆகும்.

குழிவாடியில் தோன்றும் விம்பங்கள்

[தொகு]
குழிவாடியில் தோன்றும் விம்பத்தில் பொருளின் அமைவின் தாக்கம்
பொருளின் அமைவிடம் (S),
குவியற் புள்ளி (F)
விம்பத்தின் இயல்புகள் வரைபடம்

(பொருளானது குவியற் புள்ளிக்கும் ஆடிக்கும் இடையே இருத்தல்)
  • மாயமானது(திரையில் விம்பத்தைக் கொண்டுவர முடியாது)
  • நிமிர்ந்தது
  • உருப்பெருத்தது

(பொருளானது குவியற் புள்ளியிலிருத்தல்)
  • தெறிப்படைந்த கதிர்கள் சேர மாட்டா, எனவே விம்பம் தோன்றாது.
  • விம்பம் முடிவிலியில்.

(பொருளானது குவியற் புள்ளிக்கும் வளைவுப் புள்ளிக்குமிடையில் இருத்தல்)
  • உண்மையானது(திரையில் விம்பத்தைக் கொண்டுவர முடியும்).
  • தலைகீழானது (நிலைக்குத்தாக).
  • உருப்பெருத்தது.

(பொருளானது வளைவுப் புள்ளியிலிருக்கும்)
  • உண்மையானது.
  • தலைகீழானது (நிலைக்குத்தாக)
  • அதே அளவுடையது.
  • விம்பம் வளைவுப் புள்ளியில் தோன்றும்.

(பொருளானது வளைவுப் புள்ளிக்கு அப்பால் இருத்தல்)
  • உண்மையானது.
  • தலைகீழானது (நிலைக்குத்தாக).
  • சிறிய விம்பம்
  • தூரம் அதிகரிக்க விம்பமானது குவியற்புள்ளியை நோக்கி நகரும்.
  • பொருள் முடிவிலித் தூரத்தை அடையும் போது விம்பம் குவியற்புள்ளியில் தோன்றும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nayak, Sanjay K.; Bhuvana, K.P. (2012). Engineering Physics. New Delhi: Tata McGraw-Hill Education. p. 6.4. ISBN 9781259006449.
  2. Venice Botteghe: Antiques, Bijouterie, Coffee, Cakes, Carpet, Glass பரணிடப்பட்டது 2017-03-06 at the வந்தவழி இயந்திரம்
  3. Lorne Campbell, National Gallery Catalogues (new series): The Fifteenth Century Netherlandish Paintings, pp. 178-179, 188-189, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85709-171-X
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைவாடி&oldid=4102886" இலிருந்து மீள்விக்கப்பட்டது