வலைவாசல்:வானியல்/தகவல்கள்/6
Appearance
- அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது ஆகும்.
- குறு ஒளிர்வண்டம் என்பது சில பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு சிறிய விண்மீன் பேரடையாகும்.
- உலகம் இருக்கும் பால் வழிப் பேரடைக்கு அருகே இருப்பது அந்திரொமேடா பேரடை ஆகும்.
- அனைத்துலக வானியல் ஆண்டு 2009 என அறிவிக்கப்பட்டது.
- நண்டு வடிவ நெபுலாவின் விளிம்பில் காணப்படும் வரி இழைகள், நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. அதனால் அதை நண்டு வடிவ நெபுலா என்று அழைப்பர்.
- தெய்மொசு (துணைக்கோள்) (படம்) ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும்.