வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/18
Appearance
சீயோன் தேசியப் பூங்கா தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். செந்நிற நவஜோ என்றழைக்கப்படும் மணற்பாறையினால் ஆன 15 மைல் (24 கிலோமீட்டர்) நீளமானதும் அரை மைல் வரை (800 மீட்டர்) ஆழமும் கொண்ட சீயோன் பள்ளத்தாக்கு இத்தேசியப் பூங்காவின் முக்கிய கவர்ச்சியாகும். பல் வகை தட்பவெப்பநிலை, புவியியல் வலயங்களைக் கொண்டுள்ளமையால் இங்கே உயிரியற் பல்வகைமை செறிவாக உள்ளது. இங்கு பல வகையான நிலைத்திணைகளும், 289 வகையான பறவைகளும், 75 வகை பாலூட்டிகளும் (19 வகை வௌவால்கள் உட்பட), 32 வகை ஊர்வனவும் வாழ்கின்றன.