வலைவாசல்:கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தென்கோடியில் தமிழ்நாடு மாநிலத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு மாவட்டமாகும். அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல்களும் சங்கமம் ஆகும் கன்னியாகுமரி கடற்பகுதியைக் கொண்டதாக கன்னியாகுமரி நகரம் விளங்குகிறது. ... மேலும் காண்க
கன்னியாகுமரி மாவட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 38 மாவட்டங்களுள் ஒன்றாகும். 'கன்னியாகுமரி அம்மன் கோயில்' என்றழைக்கப்படும் 'பகவதி அம்மன் கோயில்' கன்னியாகுமரி நகரில் கடலையொட்டி கட்டப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கும் வெங்கடேசுவர சுவாமி கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. துறவி விவேகானந்தர், கன்னியாகுமரிக்கு விஜயம் செய்த போது, கடலின் உள்ளே உள்ள பாறை ஒன்றில் தியானம் செய்வதற்காக கடலில் நீந்திச் சென்று, பாறை ஒன்றின் மீதமர்ந்து தியானம் செய்த இடத்தை, நினைவு கூர்வதற்காக, அந்த பாறையில் 'விவேகானந்தர் நினைவு மண்டபம்' ஒன்று கட்டப்பட்டு, பொது மக்கள் தியான பயன்பாட்டிற்காகவும், சுற்றுலா செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் நினைவாக, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அருகில், கடல் பாறை ஒன்றின் மீது திருவள்ளுவர் நின்ற கோலத்தில் காட்சி தருமாறு திருவள்ளுவர் நினைவு சிலை ஒன்றும் இங்குள்ளது. சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் சன்னதிகள் கொண்டுள்ள தாணுமாலயன் (தாணு - சிவன்; மால் - விஷ்ணு; அயன் - பிரம்மா) கோயில் என்ற வழிபாட்டுத் தலம் இம்மாவட்டத்தின் சுசீந்திரம் என்ற ஊரில் பிரசித்தி பெற்றது. புனித சவேரியார் திருத்தலம் என்ற கிறித்தவக் கோயில், இம்மாவட்டத்திலுள்ள கோட்டாறு என்ற நகரில் வியாபிக்கப்பட்டுள்ளது. மன்னர் ஆட்சிக் காலத்தில் மன்னர் அரண்மனையாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தின் பத்மனாபபுரம் அரண்மனை, தற்போது நினைவிடமாக, பொதுமக்களின் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ... மேலும் காண்க
கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்முகத் தன்மை கொண்ட பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,870,374 பேர் ஆகும். இதில் 926,345 பேர் ஆண்கள் மற்றும் 944,029 பேர் பெண்கள் ஆவர். சராசரியாக கல்வியறிவு 91.75 சதவீதம் ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 93.65% மற்றும் பெண்களின் கல்வியறிவு 89.90% ஆகும். இம்மாவட்டத்தின் பாலின விகிதம் 940/1,000 (பெண்கள்/ஆண்கள்) ஆகும். குழந்தைகளின் பாலின விகிதம் 964/1,000 ஆகும். மேலும், இந்துக்கள் 909,872 பேரும், 876,299 கிறித்தவ மக்களும், 78,590 முசுலீம் மக்களும் மற்றும் மீதமுள்ள மற்ற சமயத்தைச் சார்ந்தவர்களும் கன்னியாகுமரியில் வசிக்கின்றனர். கடலையொட்டி நகர் அமைந்துள்ளதால், மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரி நகரில், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வெளியூரிலிருந்து வரும் மக்கள் தங்கி செல்கின்றனர். அதிகாலையில் சூரிய உதயத்தைக் காணவும், மாலையில் சூரியன் மறைவதைக் காணவும், கடற்கரையில் மக்கள் அதிகம் காணப்படுவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் நினைவு சிலை ஆகிவற்றைத் தரிசிக்க, பெரும்பாலான நாட்களில், கடலில் படகு சவாரி நடைபெறுகிறது. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. ... மேலும் காண்க
... மேலும் காண்க
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலுள்ள தாணுமாலயன் கோயில் (108 சிவத்தலங்களுள் ஒன்று) மற்றும் அதன் தெப்பக்குளம். ... மேலும் காண்க
வலைவாசல்:கன்னியாகுமரி/விக்கிமீடிய திட்டங்கள் ... மேலும் காண்க |