வலைவாசல்:அப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தவிசாளராகவும் டிம் குக் விளங்குகின்றார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின்படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.
ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.
|