வர்ணம் (ஓவியர்)
Appearance
வர்ணம் | |
---|---|
அறியப்படுவது | சித்திரகதை, ஓவியம் |
வர்ணம் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். குமுதம், ஆனந்த விகடன் இதழ்களில் ஓவியம் வரைந்துள்ளார். ஆனந்த விகடன் இதழில் சாவி இவரை அறிமுகம் செய்தார். [1]
புகைப்படம் போல தோற்றம் தருமாறு ஓவியங்கள் வரைவதில் வல்லவராக இருந்துள்ளார். இந்த முறை வாஷ் டிராயிங் என்று அழைக்கப்பட்டுள்ளது.
வர்ணம் தஞ்சாவூர் மாவட்டம் 'நெய்தவாசலை' சேர்ந்தவர்.
சென்னை ஓவியக் கல்லூரியில் ஓராண்டு படித்தார். சாவி என்பவர் 'வெள்ளி மணி' பத்திரிகையில் ஓவியம் வரைய வாய்ப்பளித்தார். பிறகு குமுதம் இதழில் முப்பது வருடம் வர்ணம் வேலை செய்தார். 'வர்ணம் ஆர்ட் ஸ்கூல்' என்ற பெயரில் தபால் மூலம் சித்திரப் பள்ளியை நடத்திவந்தார்.
சித்திரக் கதைகள்
[தொகு]- போதுமே சோதனை (குமுதம்),
- புதிருக்குப் பெயர் ரஞ்சனா (குமுதம்),
- காதல் அழைக்கிறது (குமுதம்),
- சேற்றின் சிரிப்பு (குமுதம்),
- ஆறாவது விரல் (குமுதம்),
- தங்கச் சாவி (குமுதம்),
- பதினெட்டாம் நாள் (குமுதம்),
- கண்ணாடி மாளிகை (குமுதம்)
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ ரசனையின் மொத்த உருவம் சாவி ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 5) விகடன் கவர்ஸ்டோரி 10/08/2016