உள்ளடக்கத்துக்குச் செல்

வரைகலை செயற்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GeForce 6600GT (NV43) GPU

வரைகலை செயற்பகுதி (graphics processor unit, GPU), அல்லது காட்சி செயற்பகுதி (visual processor unit, VPU) என்பது ஒரு தனித்த மின்னணுச் சுற்றினால் வடிவமைக்கப்பட்டது. இது காட்சி மற்றும் வரைகலைகளைக் கையாள்வதற்கும், கணினியின் நினைவாற்றலை முடுக்கி, படங்களை ஒரே சட்டத்தினுள் விரைவாக உருவாக்கி காட்சிப்படுத்தவும் உதவுகிறது. நவீன காலங்களில் பதிகணினிகள், மேசைக்கணினிகள், அலுவலக கணினிகள், விளையாட்டுக் கணினிகள், நுண்ணறிபேசிகள் மற்றும் அலைபேசிகள் ஆகியனவற்றில் வரைகலை செயற்பகுதி பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியால் கணினி வரைகலை மற்றும் பட செயலாக்கங்கள் எளிமையாக, விரைவாக, தெளிவாக, நுட்பமாக செய்திட இயலும். மேலும், மையச் செயற்பகுதியினால் எளிதாக செய்ய இயலாத இணை செயலாக்க முறைகளை, கையாள முடியாத மிகப்பெரிய தரவுகளை, இதன் உதவியால் எளிதாக கையாள முடியும். ஒரு கணினியின் காணொளிப் பகுதியிலோ, தாயகப்பலகையிலோ அல்லது தனித்த ஒருமித்த சுற்றுகளாகவோ, வரைகலை செயற்பகுதி காணக் கிடைக்கும்.[1]

GeForce 6600GT (NV43) GPU

வரைகலை செயற்பகுதி என்ற பதம் என்விடியா என்ற நிறுவனத்தால் 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனமே, உலகின் முதல் வரைகலை செயற்பகுதியான GeForce 256-ஐ அறிமுகம் செய்து, விற்பனை செய்ய ஆரம்பித்தது. இச்செயற்பகுதியானது ஒற்றைச் சில்லுடைய செயலியால் ஒருங்கிணைக்கப்பட்டது. இது உருமாற்றுதல், துண்டாக்குதல், ஒளியமைத்தல் போன்ற செயல்களைச் செய்ய வல்லது. இச்செயற்பகுதியில் இருக்கும் ஒழுங்கமைவுப் பொறியால் 1 கோடி பல்கோணஙகளை ஒரு நொடியில் கையாள முடியும்.

""VPU"" என்ற பதம், ATI Technologies என்ற நிறுவனத்தால் 2002-ஆம் ஆண்டு Radeon 9700 என்ற செயற்பகுதியை விற்பனைக்கு அறிமுகம் செய்தபொழுது உருவாக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Denny Atkin. "Computer Shopper: The Right GPU for You". Archived from the original on 2007-05-06. பார்க்கப்பட்ட நாள் 2007-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைகலை_செயற்பகுதி&oldid=3570918" இலிருந்து மீள்விக்கப்பட்டது