உள்ளடக்கத்துக்குச் செல்

வருணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
13ஆம் நூற்றாண்டு கற்சிற்பம்
வருணாவுடன் வருணி

வருணி (Varuni) என்பது இந்துக் கடவுளான வருணனுடன் தொடர்புடைய பல தெய்வங்களின் பெயராகும். அதாவது வருணனின் மனைவி (வருணனி என்றும் அழைக்கப்படும்), அவரது மகள் (மதுவின் தெய்வம்), மற்றும் அவரது சக்தியின் உருவகம் (சப்தகன்னியர் அல்லது தாய்த் தெய்வம்).[1] சில நேரங்களில், இந்தத் தெய்வங்கள் ஒரே தெய்வமாக அடையாளம் காணப்படுகின்றன. இந்தச் சூழலில், இவர் மதுவின் தெய்வம், பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய வருணனைத் தன் துணைவியாகத் தேர்ந்தெடுத்தாள். வருணி என்ற சொல் ஒரு மதுபானத்தையும் குறிக்கிறது.[2]

வருணனின் மனைவி

[தொகு]

வருணி வருணணி என்றும் ஜலதேவி என்றும் அழைக்கப்படுகிறார். வருணனின் இரண்டு முக்கிய மனைவிகளில் இவளும் ஒருத்தி. மற்றவர் கௌரி தேவி. சில நூல்களில், கௌரி என்பது வருணியின் மற்றொரு பெயர் எனத் தெரிவிக்கின்றது. பொதுவாக வருணி தன் கணவருடன் சித்தரிக்கப்படுகிறார்.

வருணனின் மகள்

[தொகு]

வருணி என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது தெய்வம் வருணனின் மகள். இவர் மதுவின் தெய்வமாகக் கருதப்படுகிறார். புராணங்களின்படி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, வருணி பாற்கடலிலிருந்து வெளியே வந்தார் என்றும் கைகளில் ஒரு பானை மதுவை வைத்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.[3]

பாகவத புராணத்தின்படி, வருணி அசுரனால் கைப்பற்றப்பட்டார். ஆனால் இராமாயணம் வருணி தேவர்களுடன் வாழத் தேர்ந்தெடுத்ததாக விவரிக்கிறது.

மாத்ரிகா

[தொகு]

மூன்றாவது தெய்வம் மச்ச புராணத்தில் காணப்படும் ஒரு சப்தகன்னியர் ஆவார்.[4] இவர் முதல் வருணியின் வெளிப்பாடாகவும், வருணனின் தெய்வீக ஆற்றலாகவும் இருக்கிறார். கதையின்படி, இவர் அந்தகாசூரன் என்ற அரக்கனின் இரத்தத்தைக் குடிக்கப் படைக்கப்பட்டாள் என்றும் 64 யோகினிகளில் ஒருவர் என்பதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dalal, Roshen (2014-04-18). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin UK. ISBN 978-81-8475-277-9.
  2. Stutley, Margaret (2019-04-09). The Illustrated Dictionary of Hindu Iconography (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-0-429-62425-4.
  3. Mani, Vettam (1975). Puranic encyclopaedia : a comprehensive dictionary with special reference to the epic and Puranic literature. Robarts - University of Toronto. Delhi : Motilal Banarsidass. ISBN 9780842608220.
  4. Rajeswari, D. R. (1989). Sakti Iconography (in ஆங்கிலம்). Intellectual Publishing House. ISBN 978-81-7076-015-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணி&oldid=4208418" இலிருந்து மீள்விக்கப்பட்டது