உள்ளடக்கத்துக்குச் செல்

வரீந்தர் சிங் பச்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரீந்தர் சிங் பச்வா (Varinder Singh Bajwa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் அரசியல்வாதியான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

தொழில்

[தொகு]

வரீந்தர் சிங் பச்வா 1980 ஆம் ஆண்டில் சிரோமணி அகாலி தளத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டுகளில் இளைஞர் அகாலி தலைவராக பணியாற்றினார். [1] 1995 ஆம் ஆண்டில் ஓசியார்பூரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவரது பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டில் முடிந்தது. 2010 ஆம் ஆண்டில் அகாலிதளத்தில் இருந்து வெளியேறி மன்பீட் பாதலின் பஞ்சாப் மக்கள் கட்சியில் சேர்ந்தார், இருப்பினும் பஞ்சாப் மக்கள் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அகாலிதளத்தில் சேர்ந்தார், பின்னர் அகாலி தளத்திலிருந்து விலகி 2017 ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் அகாலிதளத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். வரீந்தர் சிங் பச்வாவின் மனைவி இயக்சீத்து கவுர் ஓசியார்பூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ex-SAD MP Bajwa returns to Congress" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரீந்தர்_சிங்_பச்வா&oldid=3829149" இலிருந்து மீள்விக்கப்பட்டது