வரிக்கூத்து
Appearance
வரிக்கூத்து என்பது கூத்தின் இரு பிரிவுகளில் ஒன்றாகும். இது கதை தலைவன் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல் ஆகும். செய்யுள் பாடல்களைப்பாடி இவ்வாறு நடிப்பர். ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது வரிக்கூத்து எனப்படும்.[1]
இவ்வகைக்கூத்தில் மாதவி நடித்த அழகில் கோவலன் மயங்கியதாக என்று சிலப்பதிகாரம் [2] குறிப்பிடுகிறது. இது உடல் உறுப்புக்களால் எழுதிக் காட்டிக் காதலனின் காம உணர்வுகளைத் தூண்டும் காதலியின் கூத்து.
- கண்கூடுவரி - நெற்றியில் திலகம், விரிந்த கூந்தல், வில் என மை தீட்டிய கண், குவளைமலர் போலவும், குமிழ், கோவை பழங்கள் போலவும் புன்னகை பூக்கும் வாய் ஆகியவற்றால் பெருமிதம் மதமதக்கும் பார்வையால் பார்ப்பவர் கண்ணை இழுக்கும் கோலம். [3]
- காண்வரிக் கோலம் - விரிந்த கூந்தல் வானத்தில் நிலா முகம் காட்டி, பவள வாயில் முத்து விளங்க வா என்றதும் வந்து, போ என்றதும் போதல் [4]
- உள்வரி ஆடல் - தோழி முதலான அடுத்த பெண்போல் மாறுவேடம் போட்டுக்கொண்டு விளையாடுதல் [5]
- புன்புறவரி - காதலன் அணைக்கத் துடிக்கும்போது அறியாதவள் போல நடனமாடிக்கொண்டிருத்தல் [6]
- கிளர்வரிக் கோலம் - ஊடல் [7]
- தேர்ச்சிவரி - காதலன் பிரிந்து வாழும் காலத்தில் பிரிவைத் தாங்கமுடியாதவள் போலத் தன் உறவுக்காரர்களிடம் பசப்புதல் [8]
- காட்சிவரி - மாலைக் கோலத்துடன் மற்றவர்கள் முன் தோன்றுதல் [9]
- எடுத்துக்கோள் வரி - காதலன் நினைவால் மயங்கி விழுபவள் போல விழுதலும், மற்றவர்கள் தூக்கித் தேற்றுதலும் [10]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ அரங்கேற்று காதை - உரை
- ↑ 8 வேனில் காதை
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 74-77
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 78-83
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 84-89
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 89-93
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 94-101
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 102-104
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 105-106
- ↑ சிலப்பதிகாரம், வேனில் காதை 107-108