உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றியல் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்றியல் திறனாய்வு என்பது இலக்கியப் படைப்பொன்றை வரலாற்றுப் பின்னணியில் நிறுத்தித் திறனாய்வது ஆகும்.[1] இதையே வரலாற்று உந்து சக்திகளின் ஒளியில் இலக்கியப் படைப்பொன்றை நோக்குதல் என்றும் கூறலாம்.[2] இலக்கியம் காலத்தின் வெளிப்பாடு என்று சொல்லப்படுகின்றது. இதனால், குறிப்பிட்ட ஒரு காலத்தில் தோன்றும் இலக்கியப் படைப்பானது அக்காலத்தின் நிகழ்வுகளையும், நினைவுகளையும் வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, ஒரு இலக்கியம் அல்லது ஒரு இலக்கியத்தின் பொருள் காலங்களினூடு எவ்வாறான மாற்றங்களைப் பெற்று வருகின்றது என்பதை ஆய்வு செய்வதும் வரலாற்றியல் திறனாய்வுக்கு உட்பட்டதே. எந்தவொரு விடயத்தையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது இரண்டு வழிகளில் ஆராயலாம். ஒன்று, கிடைநிலை ஆய்வு. மற்றது நிலைக்குத்து நிலை ஆய்வு. இவற்றில் நிலைக்குத்து நிலை ஆய்வு காலம் சார்ந்தது. பல்வேறு காலங்களினூடாக அவ்விடயத்தை ஆராய்வது. அதனால், வரலாற்றியல் திறனாய்வு நிலைக்குத்து நிலை ஆய்வு ஆகும்.

குறிப்புக்கள்

[தொகு]
  1. பஞ்சாங்கம், க., 2011. பக். 45.
  2. நடராசன், தி. சு., 2009. பக். 67.

உசாத்துணைகள்

[தொகு]
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்றியல்_திறனாய்வு&oldid=1561733" இலிருந்து மீள்விக்கப்பட்டது