உள்ளடக்கத்துக்குச் செல்

வரதராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவலர்
வரதராஜன்
பிறப்புஅண். 1930[1]
பண்ணைப்புரம், மதுரை மாவட்டம், சென்னை மாகாணம்,
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(இப்பொழுது தேனி மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு (அகவை 42-44)[2][3]
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1949-1973
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1957-64)
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (1964-72)
திராவிட முன்னேற்றக் கழகம் (1972-73)
பெற்றோர்சின்னத்தாயி (தாய்)
இராமசாமி (தந்தை)
வாழ்க்கைத்
துணை
வி. சீனியம்மாள்
பிள்ளைகள்ஜீவதுரை
ஹோமோ ஜோவ் டேனியல்
ஸ்டாலின்
சிவராமன்
உறவினர்கள்தமக்கை
* கமலம்
* பத்மாவதி
தம்பிகள்
* ஆர். டி. பாஸ்கர்
* இளையராஜா
* கங்கை அமரன்
உடன் பிறந்தவரின் மகள்
* பவதாரிணி
* வாசுகி பாஸ்கர்
* விளாசினி
உடன் பிறந்தவரின் மகன்
* கார்த்திக் ராஜா
* யுவன் சங்கர் ராஜா
* வெங்கட் பிரபு
* பிரேம்ஜி அமரன்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்பாவலர் பிரதர்ஸ் (1961-69)

"பாவலர்" வரதராஜன் (Pavalar Varadharajan) தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். 1960களில் பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக்குழுவிற்கு தலைமை வகித்தார். இக்குழுவில் பின்னர் புகழ்பெற்ற அவரது சகோதரர்கள் - ஆர். டி. பாஸ்கர், இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) பிரச்சார பணிகளுக்காக அறியப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபட்டபோது, அவர் அதன் பிரிவான சிபிஐ(எம்) கட்சியில் இணைந்தார். தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டில், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) தொடர்பு கொண்டிருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

வரதராஜன், தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தினரான இராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக வரதராஜன் பிறந்தார். இவரது தம்பிகள் ஆர். டி. பாஸ்கர், இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆவார். [4] திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நிலைய வித்துவானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் இசை கற்றார்.[5]

அரசியல் பணிகள்

[தொகு]

இளமையில் வரதராஜன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சிறந்த மேடைப் பாடகர், கவிஞர், நாடகாசிரியர், மற்றும் நடிகர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர் என்பதால் இவரை பாவலர் வரதராசன் என்று அழைத்தனர். பாவலர் வரதராஜனின் மனைவி பெயர் சீனியம்மாள். இவரது நான்கு மக்களில் ஹோமோ ஜோ என்பவர் திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து இளமையில் மறைந்தவர்.[6]1962-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சி மாநாட்டில் தியாகி மணவாளன் நாடகத்தை எழுதி நடத்தியுள்ளார். இந்நாடகத்தில் தியாகி மணவாளனின் இரண்டு பிள்ளைகளாக பாவலரின் பிள்ளைகளும், மற்ற பாத்திரங்களில் தனது தம்பிமார்களும் நடித்துள்ளனர். தியாகியின் மனைவியாக வரதராஜனின் மனைவியும், தாயாராக தனது சொந்தத் தாயாரும் நடிப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டது. இவரது குடும்பமே கலைக் குடும்பமாகத் திகழ்ந்தது என்பதை தோழர் மாயாண்டி பாரதி தம் கட்டுரையில் தெரிவித்துள்ளார். பொதுவுடமைக் கட்சித் தலைவர் கூத்தகுடி சண்முகம் வரதராஜனுக்கு இசைவானர் எனும் விருதை வழங்கி பெருமைபடுத்தினார்.

இறப்பு

[தொகு]

வாழ்க்கையின் நெருக்கடியான நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த பாவலர் வரதராஜன் மதுரை அரசினர் மருத்துவ மனையில் இறந்தார். வரதராஜன் பொதுவுடைமை கட்சியில் இருந்து நீங்கி திமுகவிற்காக பிரசாரம் செய்து கொண்டிருந்ததால், பொதுவுடைமை கட்சியைச் சேந்தவர்கள் மூலம் வரதராஜன் அடிக்கப்பட்டதாகவும், அந்த காயங்களால் மருந்துவமனையில் இறந்ததாகவும் இருக்கும் செய்தியைப் பற்றி ஒரு நேர்காணலில், நெறியாளர் முக்தார், கங்கை அமரனிடம் கேட்ட பொழுது, அதற்கு அமரன், வரதராஜனின் மனைவி, வரதராஜன் அடிக்கப்பட்டார் என்று பின்னாளில் கூறினார் என்று மட்டும் சொல்லி நெறியாளர் சொன்ன தகவலை மறுக்காமல் முடித்துக்கொண்டார்.[7]

இவரைப் பற்றிய நூல்கள்

[தொகு]
  • சங்கராபுரம் வேலுச்சாமி என்ற சங்கை வேலவன் படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராசன் என்ற இந்த நூலைத் தொகுத்துள்ளார்.
  • பாவலர் வரதராஜனின் பாடல்களைத் தொகுத்து பாவலர் வரதராஜன் பாடல்கள் என்ற நூலை இளையராஜா வெளியிட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Correspondent, Vikatan (18 June 2022). "பண்ணைப்புரத்தில் பாவலர் சகோதரர்கள்! #AppExclusive". www.vikatan.com/. Retrieved 2023-04-28. {{cite web}}: |last= has generic name (help)
  2. பிரபா, கானா. "பாவலரு பாட்டு". Retrieved 2023-02-14.
  3. தமிழ், த டைம்ஸ் (2016-02-20). ""லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா":குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?". THE TIMES TAMIL. Retrieved 2023-02-14.
  4. மறக்க முடியாத பாவலர்
  5. மலர், மாலை (2017-11-11). "திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா". www.maalaimalar.com. Retrieved 2024-05-27.
  6. Ilaiyaraaja's nephew Pavalar Maindhan passes away
  7. Sathiyam News (2023-01-14). திமுகவில் இணையும்.. தமிழக பாஜகவின் கங்கை அமரன் -அதிரடி அரசியல் திருப்பம்-Gangai Amaran - Nerukku Ner (youtube interview). Satyam News. 16 minutes in. Retrieved 2025-02-01 – via YouTube.
  8. பாவலர் வரதராஜன் பாடல்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதராஜன்&oldid=4201516" இலிருந்து மீள்விக்கப்பட்டது