உள்ளடக்கத்துக்குச் செல்

வண்டல் விசிறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சில் உள்ள பைரினீசு வண்டல் விசிறி

வண்டல் விசிறி (alluvial fan) என்பது செறிந்த படிவிடத்தில் இருந்து விசிறி போல விரிந்தமையும் வண்டல் மட்படிவாகும். இவை மலைப்பாங்கான வறள், பகுதி வறள் பகுதிகளில் அமைகின்றன. இவை பேரளவு மழைபொழியும் ஈரப்பதம் கூடிய பகுதிகளிலும் பனியாற்றுப் பகுதிகளிலும் அமையலாம். இவை 1 ச.கி.மீ இலிருந்து 2000 ச.கிமீ பரப்பளவில் அமைகின்றன.

வண்டல் விசிறி என்பது ஆற்று நீரோட்டத்தால் ஏற்படும் நில வடிவமைப்பாகும். ஆறு மலையில் இருந்து ஓடி வருகின்ற போது, வேகம் குறைந்து அது தன்னுடைய சுமையின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படியச் செய்கிறது. மேலும், ஆற்றின் சுமை அதிகமாகும் போது படிதல் ஏற்படுகிறது. இவ்வாறு ஆற்றால் குவிக்கப்பட்ட பொருள்களை வண்டல் மண் என்கிறோம்.

மலையிலிருந்து குறுகிய கணவாயில் ஓடிவந்த ஆறு சமநிலத்தில் இறங்கி பரவலாக விரிந்து ஓடும்போது அதனுடைய வேகம் திடீரென்று குறைந்து, கடத்திக் கொண்டு வரப்பட்ட வண்டல் மலையடிச் சரிவில் படிகிறது. இந்தப் படிவு விசிறி வடிவம் உடையதாக இருப்பதால் இதனை வண்டல் மண் விசிறி என்பா்.

தெற்கு ஈரானில் உள்ள வண்டல் விசிறி

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டல்_விசிறி&oldid=3918566" இலிருந்து மீள்விக்கப்பட்டது