உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டப்பாதை வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டப்பாதை வழித்தடம், சிங்கப்பூர் துரிதக் கடவு சேவையின் நான்காவது வழித்தடமாகும். தற்பொழுது இத்தடத்தின் நீளம் 35.7 கிலோமீட்டர், மற்றும் இதில் 31 ரயில் நிலையங்கள் உள்ளன. (இன்னும் சில கட்டப்பட்டு வருகின்றன). இவை அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இதுவே உலகின் மிக நீளமான தானியங்கி துரிதக் கடவு சேவை வழித்தடமாகும். இந்த வழித்தடத்தின் நிறம் ஆரஞ்சு ஆகும். இந்த தடத்தின் சேவையை எஸ் எம் ஆர் டி வழங்குகிறது.

இதன் பெயர் காட்டுவதுபோல், இந்த வழித்தடம் வட்டமாக இருப்பதில்லை. இடையில் ஒரு சிறு இடைவெளி இருக்கும். அதாவது துறைமுகம் தொடருந்து நிலையத்திலிருந்து, மரீனா பே தொடருந்து நிலையம் வரை செல்ல விரும்புவோர், வடக்கு கிழக்கு வழித்தடத்தை பயன்படுத்த வேண்டும்.

கிழக்கு மேற்கு வழித்தடத்திர்க்கு மாற விரும்புவோர், பாய லேபார் மற்றும் புவன விஸ்தா ஆகியவற்றில் உள்ள சந்திப்புகளை பயன்படுத்தலாம்.

வடக்கு தெற்கு வழித்தடத்திர்க்கு மாற விரும்புவோர், பீஷான், டோபி காட் மற்றும் மரீனா பே ஆகியவற்றில் உள்ள சந்திப்புகளை பயன்படுத்தலாம்.

தற்பொழுது இந்த பாதையில் ஓடும் ரயில்களில் மூன்று வண்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

ஆதாரங்கள்

[தொகு]

வெளிஇணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டப்பாதை_வழித்தடம்&oldid=3608683" இலிருந்து மீள்விக்கப்பட்டது