உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டகொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°58′58″N 80°38′53″E / 6.98278°N 80.64806°E / 6.98278; 80.64806

வட்டகொடை

வட்டகொடை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°58′13″N 80°38′53″E / 6.9703°N 80.6481°E / 6.9703; 80.6481
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1335 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

வட்டகொடை (Watagodde) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரும் வட்ட கொடையாகும். இஃது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தலவாக்கலை, கிரேட் வெசுடன் தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இந்நகர் தலவாக்கலை-பூண்டுலோயா- தவலந்தன்னை பெருந்தெருவில் பூண்டுலோயாவுக்கும் தலவாக்கலைக்கும் இடையே அமைந்துள்ளது.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டகொடை&oldid=2446612" இலிருந்து மீள்விக்கப்பட்டது