வடபள்ளி சிறீனிவாசு
வடபள்ளி சிறீனிவாசு | |
---|---|
பிறப்பு | [1] வாரங்கால், ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்பொழுது தெலங்காணா) | 4 சூலை 1960
இறப்பு | 29 பெப்ரவரி 2024 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 63)
பணி | பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–2024 |
வாழ்க்கைத் துணை | இந்திரா |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) |
|
வடபள்ளி சிறீனிவாசு (Vaddepalli Srinivas)(4 சூலை 1960-29 பிப்ரவரி 2024) தெலுங்கு திரைப்படத்துறையில் பணியாற்றிய ஓர் இந்தியப் பாடகரும் நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார்.[2] கப்பார் சிங் (2012) படத்தில் "கண்ணுலந்தி கண்ணுலுன்னா பில்லா" பாடலுக்காகச் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதைத் தெலுங்கு மொழியில் வென்றார்.[3]
இளமையும் தொழிலும்
[தொகு]வடபள்ளி சிறீனிவாசு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் (தற்போது தெலங்காணா) வாரங்கல் மாவட்டத்தில் பிறந்தார்.[4] இவரது குழந்தைப் பருவத்திலேயே இவரது குடும்பம் ஐதராபாத்திற்குக் குடிபெயர்ந்தது. இவர் தனது 3 வயதிலே பாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1994ஆம் ஆண்டில் மேகனா ஆடியோ மூலம் கலிகி சிலுகலு என்ற சுயாதீன தொகுப்பினை வெளியிட்டார்.[5][6] இதே வருடம் இவர் "கரம் கரம் ப்யாய் கஜ்ஜாலா சனாரி" என்ற பாடலைப் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்தப் பாடலை இராஜ்-கோட்டி இசையமைத்த "நம்ஸ்தே அண்ணா" திரைப்படத்தில் இடம்பெற்றது. பின்னர் இவர் பல தனியாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இசைத் தொகுப்பு
[தொகு]பாடல்கள்
[தொகு]ஆண்டு | பாடல் (கள்) | பணி |
---|---|---|
1994 | "கரம் கரம் பை கஜ்ஜால சனாரி" | நாமசுதே அண்ணா |
1995 | "யெம் கொனேட்டு லெடு" | எர்ரோடு |
2008 | "யெந்தபானி செஸ்டிவிரோ" | கிங் |
2012 | "கன்னுலாந்தி கண்ணுலுன்னா பில்லா" | கப்பார் சிங் |
2018 | "ராயே ராயே சின்னி" | பெங்கால் டைகர் |
இசைத் தொகுப்பு
[தொகு]ஆண்டு | தலைப்பு | வெளியீடு |
---|---|---|
1994 | கலிகி சிலுகலு | சோனி மியூசிக் |
2000 | ஓ பில்லா பங்காராமா | |
2008 | பல்லேடுரி பில்லா | காயத்ரீ இசை |
இறப்பு
[தொகு]சிறீனிவாசு உடல்நலக் குறைபாடுகள் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் பிப்ரவரி 29, 2024 அன்று தனது 64 வயதில் காலமானார்.[7]
விருது
[தொகு]விருது | ஆண்டு | வகை | பணி | முடிவு | மேற். |
---|---|---|---|---|---|
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | 2013 | சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் - தெலுங்கு | "கண்ணுலந்தி கண்ணுலுன்னா பில்லா" (கப்பர் சிங்கிலிருந்து) | வெற்றி | [8] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 16 April 2024. Retrieved 6 February 2025.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Velugu, V6 (2024-02-29). "Vaddepalli Srinivas: ప్రముఖ జానపద గాయకుడు వడ్డేపల్లి శ్రీనివాస్ కన్నుమూత". V6 Velugu (in தெலுங்கு). Archived from the original on 16 April 2024. Retrieved 2025-02-06.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Filmfare Awards (2012) winners list". 2017-01-15. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/filmfare-awards-2012-winners-list/articleshow/21189454.cms.
- ↑ telugu, NT News (2024-03-01). "సినీ జానసద గాయకుడు వడ్డేపల్లి శ్రీనివాస్ కన్నుమూత". www.ntnews.com (in தெலுங்கு). Archived from the original on 1 March 2024. Retrieved 2025-02-06.
- ↑ ABN (2020-02-07). "-జానపద గాయకుడు- కత్తులతో బెదిరించారు.. నా స్టూడియోనూ తగలబెట్టారు". Andhrajyothy Telugu News (in தெலுங்கு). Archived from the original on 29 May 2023. Retrieved 2025-02-06.
- ↑ ABN (2024-03-01). "Vaddepalli Srinivas: జానపద గాయకుడు వడ్డేపల్లి శ్రీనివాస్ ఇకలేరు! | Folk Singer Vaddepalli Srinivas is no more avm". Chitrajyothy Telugu News (in தெலுங்கு). Retrieved 2025-02-06.
- ↑ Velugu, V6 (2024-03-01). "సింగర్ వడ్డేపల్లి శ్రీనివాస్ కన్నుమూత". V6 Velugu (in தெலுங்கு). Archived from the original on 16 April 2024. Retrieved 2025-02-06.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ N, Ramesh (2024-02-29). "'గబ్బర్ సింగ్' గాయకుడు వడ్డేపల్లి శ్రీనివాస్ కన్నుమూత". www.dishadaily.com (in தெலுங்கு). Retrieved 2025-02-06.