உத்தர தினஜ்பூர் மாவட்டம்
உத்தர தினஜ்பூர் மாவட்டம் উত্তর দিনাজপুর জেলা | |
---|---|
உத்தர தினஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜல்பைகுரி கோட்டம் |
தலைமையகம் | ராய்காஞ்ச் |
பரப்பு | 3,142 km2 (1,213 sq mi) |
மக்கட்தொகை | 3,000,849 (2011) |
படிப்பறிவு | 60.13% |
பாலின விகிதம் | 936 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உத்தர தினஜ்பூர் அல்லது வடக்கு தினஜ்பூர் (Uttar Dinajpur அல்லது North Dinajpur) மாவட்டம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் ராய்காஞ்ச் மற்றும் இஸ்லாம்பூர் என இரு உட்கோட்டங்களாக (subdivisions) பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
[தொகு]இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3142 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். நிலப்பரப்பு சமதளமாக இருந்தாலும் தென் திசையை நோக்கி சாய்வாகவே உள்ளது. தென்திசையில் குலிக், நாகர், மஹாநந்தா ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இம்மாவட்டத்தின் அமைவு 25°22′N 88°04′E / 25.37°N 88.07°E ஆகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]1577 கிராமங்களைக் கொண்ட இம்மாவட்டம்,
- 4 நகராட்சிகள்
- 9 வட்டங்கள்
- 99 பஞ்சாயத்துகள்
என பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கட்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 30,00,849 பேர் வசிக்கின்றனர்.[2] இது அல்பேனியா நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] மக்கட்தொகைப் பெருக்க சதவீதம் 22.9 ஆகும். [2]1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற வீதத்தில் உள்ளனர்.[2] கல்வியறிவு 60.13% ஆகும்.[2]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து மற்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர்.[4]
- இந்து - 51.47%
- முஸ்லீம் - 47.36%
மொழி
[தொகு]இம்மாவட்டத்தில் வங்காள மொழி முக்கிய மொழியாகும். இந்தி மற்றும் உருது மொழி பேசுவோர் இஸ்லாம்பூர் பகுதியில் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-12-22.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
Albania 2,994,667 July 2011 est.
{{cite web}}
: line feed character in|quote=
at position 8 (help) - ↑ http://www.censusindia.gov.in/Tables_Published/Basic_Data_Sheet.aspx