உள்ளடக்கத்துக்குச் செல்

வச்ரபோகா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வச்ரபோகா அருவி (Vajrapoha Falls) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் ஜம்போதி கிராமத்திலிருந்து தென்மேற்கு திசையில் 8.5 கிலோமீட்டர் (5.3 மைல்) என்ற மலை வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். உயரமான மலையடிவாரத்தில் கவாலி மற்றும் சாப்போலி கிராமத்திற்கு இடையில், 200 மீட்டர் (660 அடி) வரை விழும் அழகிய அருவியில் பாயும் மாண்டோவி நதி, மழைக்காலத்திற்குப் பிறகு சிறப்பாகக் காணப்படுகிறது [1] மேலும், மழைக்காலத்திற்குப் பிறகும் (சூன்-அக்டோபர்) சிறப்பாகக் காணப்படுகின்றன. [2] இந்த அருவி பெல்காமுக்கு தென்மேற்கே 1.5 மணி நேரம் பயண தூரத்தில் உள்ளது. [3]

காவோலி, ஹேமதாகா, ஜம்போதி, கனகும்பி, மற்றும் தலவாடே கிராமங்களுக்கு அருகிலுள்ள நீரோடைகளால் மண்டோவி ஆறு (மகாதாய் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது) நீராதரங்களை பெறுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இப்பிரதேசத்தில் ஆண்டுக்கு 3,800 முதல் 5,700 மில்லிமீட்டர் (150 முதல் 220 அங்குலம்) வரை மழை பெய்கிறது. கோடை மாதங்களில் (மார்ச்-மே) நீரின் அளவு குறைவாக இருக்கும். [2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்ரபோகா_அருவி&oldid=3816537" இலிருந்து மீள்விக்கப்பட்டது