உள்ளடக்கத்துக்குச் செல்

வசூரிமாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசூரிமாலா
தெய்யம் ஆட்டத்தில் வசூரிமாலா பெண் தெய்வம்
வகைஇந்து சமயம்
சமயம்மலபார் பிரதேசம், கேரளா & குடகு மாவட்டம், கர்நாடகா இந்தியா

வசூரிமாலை (Vasoorimala), வட கேரளாவின் மலபார் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் வணங்கப்படும் நாட்டார் பெண் தெய்வமாகும். சிவன் மற்றும் காளி கோயில்களில் வசூரிமாலா உப தெய்வமாக வணங்கப்படுகிறது. தொற்று நோய்களான பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மை நோய்களை காக்கும் தெய்வமாக வசூரிமாலை மக்களால் வணங்கப்படுவதுடன், வசூரிமாலா தெய்யம் ஆடப்படுகிறது. தொன்மவியல்படி, தாரகன் எனும் அசுரனின் மனைவியாக வசூரிமாலா தெய்வம் கருதப்படுகிறது. வசூரி என்பது பெரியம்மை நோய்க்கான மலையாளச் சொல்லாகும்.[1][2] வசூரிமாலா என்பது கொப்பளங்களின் சங்கிலி எனப்பொருளாகும். இதனை தமிழில் வைசூரி என்று அழைப்பர். வசூரி என்பது பெரியம்மை நோய்க்கான மலையாள வார்த்தையாகும். வசூரிமாலா என்றால் கொப்புளங்களின் சங்கிலி என்று பொருள்.

பின்னணி

[தொகு]

பண்டைய காலங்களில் கடவுளின் கோபத்தால் நோய்கள் ஏற்படுவதாக நம்பப்பட்டது.[3][4][5] எனவே, நோய்களை தோற்றுவிக்கும் தெய்வங்களையும், நோய் தீர்க்கும் தெய்வங்களையும் வழிபட்டனர். பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை போன்ற தொற்று நோய்களின் தெய்வமாக வசூரிமலை நம்பப்படுகிறது. கேரளாவில் உள்ள கொடுங்கல்லூர் பகவதி கோவில், வலியகுளங்கரா தேவி கோயில், மற்றும் ஸ்ரீ பொற்கிளி காவு உள்ளிட்ட கோயில்களில் வசூரிமாலை உப தெய்வமாக வழிபடப்படுகிறது.[6][7]

இந்தியப் புராணங்களில் பத்ரகாளியின் கதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்தியா முழுவதும் பத்ரகாளி தெய்வம் வழிபடப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்தின் படி, தாரிகன் (தாருகன் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்ற அசுரனை சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய பத்ரகாளி ஒரு போரில் தாரிகனைக் கொன்றாள்.

கொட்டாரம் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலாவில் கேரள நாட்டுப்புறக் கதைகளில் இருந்து வசூரிமாலாவின் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. பத்ரகாளிக்கும் தாரிகனுக்கும் நடந்த போரின் போது, தாரிக்கன் இறப்பது கிட்டத்தட்ட உறுதியான போது, தாரிகனின் மனைவி மனோதரி, கைலாசத்தை அணுகி சிவபெருமானை மகிழ்விக்க கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தாள். மனோதரியின் வழிபாட்டில் திருப்தியடைந்த சிவன், தன் உடலில் உள்ள வியர்வையைத் துடைத்து, அவளிடம் கொடுத்து ஆசிர்வதித்து, அதை மக்கள் உடலில் தெளித்தால், அவளுக்குத் தேவையான அனைத்தையும் தருவதாகக் கூறினார். போரில் வென்ற பத்ரகாளி தன் கணவனின் தலையுடன் வருவதை மனோதரி கண்டாள். கோபத்தில் அவள் அந்த வியர்வை நீரை பத்ரகாளியின் உடலில் தெளித்தாள். அதன் விளைவாக பத்ரகாளியின் உடலில் பெரியம்மை தோன்றியது என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பத்ரகாளி மனோதரியின் கண்களைத் துளைத்து, அவளுக்கு வசூரிமாலா என்று பெயரிட்டு, அவளைத் தனக்குத் துணையாக ஆக்கிக் கொண்டாள்.

மற்றவைகள்

[தொகு]

சிவபெருமான் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டபோது சிவ உணர்விலிருந்து வசூரிமாலை எழுந்ததாக மற்றொரு புராணம் கூறுகிறது. தாரிகாவைக் கொல்வதில் குரும்பாவை (பத்ரகாளி) பின்பற்றுபவராகவும் வசூரிமாலாவைக் காணலாம்.[8]

வசூரிமாலா தெய்யம்

[தொகு]
வசூரிமால தெய்யம்

வசூரிமாலா தெய்யம் என்பது வடகேரளாவில் உள்ள கோவில்களில் நடத்தப்படுகிறது.[7] பெரியம்மை தொற்றுநோய் பரவியபோது, அம்மை நோயிலிருந்து விடுபட மக்கள் வசூரிமாலா அம்மையை தெய்யம் வடிவில் வழிபடத் தொடங்கினர் என்று நம்பப்படுகிறது.[8] தற்போது வசூரிமாலா தெய்யம் நோய்களை தீர்க்கும் விதமாக ஆடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. തുമ്മാരുകുടി, മുരളി. "കുഴിയാറും തീര്ത്തല്ലോ പാറുക്കുട്ടീ". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2022-02-18. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  2. India, The Hans (8 July 2018). "Theyyam A Spell" (in en). www.thehansindia.com இம் மூலத்தில் இருந்து 2022-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220218085427/https://www.thehansindia.com/posts/index/Sunday-Hans/2018-07-08/Theyyam-A-Spell/396150. 
  3. "Vasoorimala Theyyam". old.travelkannur.com. Archived from the original on 2020-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  4. Abraham, Jyothi Susan; Gopalakrishnan, Kavitha; James, Meera Elizabeth (11 February 2022). Pandemic Reverberations and Altered Lives (in ஆங்கிலம்). Kottayam: Co-Text Publishers. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-952253-4-7. Archived from the original on 2022-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
  5. Balasubramanian, Lalitha (2015-08-19). Kerala ~ The Divine Destination (in ஆங்கிலம்). One Point Six Technology Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81576-23-6. Archived from the original on 2022-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
  6. "Valiyakulangara Devi Temple, Mahadevikad, Karhikapalli". www.valiyakulangaratemple.org. Archived from the original on 2022-02-18. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  7. 7.0 7.1 "വസൂരിമാല". Keralaliterature.com. 14 October 2017. Archived from the original on 18 February 2022. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.
  8. 8.0 8.1 PV, Rekha. "രോഗദേവതയായ വസൂരിമാല ഭഗവതി തെയ്യം" (in ml). Samayam Malayalam. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2022-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220218085425/https://malayalam.samayam.com/spirituality/theyyam-vasoorimala-bagavathi/articleshow/51900342.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசூரிமாலா&oldid=3742550" இலிருந்து மீள்விக்கப்பட்டது