உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்தம் கே. கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்தம் கே. கார்த்திகேயன் (Vasantham K. Karthikeyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2020 ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வருகிறார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வசந்தம் கார்த்திகேயன் அவர்களின் ஏற்பாட்டைப் போல வேறு எந்த மாவட்டத்திலும் நான் பார்த்ததில்லை என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]

2021 தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில், இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக எஸ். கே. டி. சி. ஏ. சந்தோசு போட்டியிட்டார்.

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 இரிஷிவந்தியம் திமுக 92,607 47.08[5]
2021 இரிஷிவந்தியம் திமுக 113,912 53.56[6]

கோவிட் 19

[தொகு]

2020 ஆம் ஆண்டில் வசந்தம் கார்த்திகேயனின் முழு குடும்பமும் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 78. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. [1]
  3. "15th Assembly Members". Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  4. List of MLAs of Tamil Nadu Legislative Assembly
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
  6. "Rishivandiyam Election Result". பார்க்கப்பட்ட நாள் 12 Jun 2022.
  7. "Vasantham K Karthikeyan becomes second DMK MLA to test positive for COVID-19". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/22/vasantham-k-karthikeyan-becomes-second-dmk-mla-to-test-positive-for-covid-19-2159592.html. பார்த்த நாள்: 18 July 2022.