ழுஹர் தொழுகை
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ழுஹர் தொழுகை (அரபு மொழி: صلاة الظهر, ṣalāt aẓ-ẓuhr) நண்பகலுக்கு பின்னரான தொழுகையாகும் (அஸ்ர் அதான் சொல்ல முன்னர்) ழுஹர் தொழுகை முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒரு நேர தொழுகையாகும். ஐவேளை தொழுகையானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும்.[1] இது நான்கு ரக்அத்துக்களைக் கொண்டது.[2] எனினும், பிரயாணங்களின் போது விதிமுறைகளுக்கு இரண்டு ரக்அத்தாக சுருக்கி அஸ்ர் தொழுகையுடன் சேர்த்துத் தொழ முடியும்.
வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்
வெள்ளிக் கிழமையன்று ழுஹர் தொழுகைக்கு பதிலாக ஜும்ஆ தொழுகை தொழப்படும்.[2][3]
தொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ழுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான அதான்(தொழுகைக்கான அழைப்பு) பள்ளிவாசலால்நியமக்கப்பட்டிருக்கும் முஅத்தின் என்பவரால் சொல்லப்படும். அதற்காக பள்ளிவாயில்களில் மினாராக்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள் மீது பொருத்தப்படுகின்றன. இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.
பெயர் வேறுபாடுகள்
[தொகு]Region/country | Language | Main |
---|---|---|
Arab World | Arabic | صلاة الظهر (Ṣalāh aẓ-ẓuhr) |
Iran, Afghanistan | Persian | نماز ظهر (namâz-e zohr) |
Pakistan, North India | Urdu | نماز ظہر (namaaz e zuhr) |
Turkey | Turkish | Öğle namazı |
Kazakhstan | Kazakh | Бесін намазы (Besin namazy) |
Azerbaijan | Azeri | Zöhr namazı |
Albania | Albanian | Namaz i mesditës |
Balkans | Serbo-Croatian, Bosnian | Podne-namaz |
Bangladesh, East India | Bengali | যুহর, যোহর (Juhor, Johor) |
Greater Somalia (Somalia, Djibouti, Somali Region) | Somali | Salaada Duhur |
Malaysia, Singapore, Brunei, Indonesia (nationwide) | Bahasa Indonesia, Bahasa Melayu | Salat zuhur, Solat zuhur |
Indonesia (West Java, Banten) | Basa Sunda | Lohor |
Uzbekistan | Uzbek | Peshin namozi |
Iraqi Kurdistan | Sorani | نوێژی نیوەڕۆ |
ழுஹர் தொழுகை நேரம்
[தொகு]- நேரம் துவங்குவது: சூரிய உதயத்திற்கும் சூரியன் மறைவுக்கும் இடையில் சரியாக வானில் உயர்ந்த இடத்தை (உண்மையான நண்பகல்) சூரியன் கடந்துவிட்டால் போது இது நிகழ்கிறது.[4]
- நேரம் முடிவடைதல்: தினசரி அஸர் தொழுகையின் நேரம் (பிற்பகல் தொழுகை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Significance of Offering The Isha Prayer and Its Benefits". www.quranreading.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ 2.0 2.1 "Salat al-Duhr - Oxford Islamic Studies Online". www.oxfordislamicstudies.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ "salat | Definition & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ ழுஹர் Conducting Zohr Prayers , qul.org வலைத்தளம், 2/3/2019 இல் பெறப்பட்டது
- Prayer Times NYC பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம்