உள்ளடக்கத்துக்குச் செல்

ழீன் மூயெல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ழீன் மூயெல்லர் (Jean Mueller) (பிறப்பு: 1950) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வால்வெள்ளிகளையும் சிறுகோள்களையும் பல மீவிண்மீன் வெடிப்புகளையும் கலிபோர்னியாவில் உள்ள பலோமார் வான்காணகத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.[1]

அறிவியல் பணிகள்

[தொகு]

இவர் மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊக்கர் தொலைநோக்கியை 1983 இல் இயக்கிய முதல் பெண்மணியாவார். இவரே முதன்முதலாக பலோமார் வான்காணகத்தில் தொலைநோக்கி இயக்குபவராக 1985 இல் பணியமர்த்தப்பட்ட பெண்மணியாவார்.

இரண்டாம் பலோமார் வாண்காணக நோக்கீட்டு அளக்கை 1985 ஆகத்தில் தொடங்கியது. 14 இஞ்சு முதல் ஒளிப்படத்தட்டுகள் அப்போது 48 இஞ்சு சுகிமிடு ஒளிப்படக்கருவி என வழங்கிய சாமுவேல் ஓசுச்சின் தொலைநோக்கியில் இருந்து எடுக்கப்படலாயின. அவ்வாண்டு ஜூலையில் ழீன் மூயெல்லர் 48 இஞ்சு ஒளிப்படக் கருவி இரவு உதவியாளராக பணியமர்த்த்ப்பட்டார். அப்போது இவர் நோக்கீட்டாளராகவும் தொலைநோக்கி இயக்குபவராகவும் பணிசெய்தார். இவர் 5500 ஒளிப்படத் தட்டுகளைப் படம்பிடித்தார். முதலில் தொலைநோக்கியை உரிய கோணத்தில் அமைத்து 2000 ஜூன் 3 இல் கடைசித் தட்டை எடுக்கும் வரை இவரே தொடர்ந்து பணிபுரிந்து வரலாற்ருச் சாதனை படைத்துள்ளார். அன்று இரவே இவர் தனது கடைசி 2000 செமீ மீயொளிர் விண்மீன் வெடிப்பையும் கண்டுபிடித்துள்ளார்.

இவர் பல நூறு மணிநேரம் (தன் ஓய்வு நேரத்தில்லிவரெடுத்த ஒளிப்பட்த் தட்டுகளை உயர்பெருக்க முறையால் அலகிட்டு வால்வெள்ளிகளையும் வேகமாக இயங்கும் சிறுகோள்களையும் X/Y கட்ட வரைபட்த்தில் மீயொளிர் விண்மீன் வெடிப்புகளையும் 1 மிமீ தடிப்புத் தட்டுகளில் இருந்து கண்டுபிடித்துள்ளார். சில நேரங்களில், இவர் ஒரே தட்டில் நூறு பால்வெளிகளையும் படம்பிடித்து அவற்றின் ஊடே மீயொளிர் விண்மீன் வெடிப்புகளைத் தேடினார். இவர் இந்த தட்டுகளை முதல் வானளக்கைத் தட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதே களங்கள் உள்ளனவா எனளஆய்வு மேற்கொண்டார். இரண்டாம் பலோமார் வான்காணக வானளக்கையின்போது தான் இவர் தனது அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார்.

கண்டுபிடிப்புகள்

[தொகு]
ழீன் முயெல்லர், சாமுவேல் ஓசுச்சின் தொலைநோக்கியுடன்
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 13 [2]
4257 உபாசுதி ஆகத்து 23, 1987
4558 ஜேன்சிக்[1] ஜூலை 12, 1988
6569 ஒந்தாத்யே ஜூன் 22, 1993
9162 கிவீலா ஜூலை 29, 1987
(11028) 1987 UW{{{2}}} அக்தோபர் 18, 1987
11500 தோமையோவித்[2] அக்தோபர் 28, 1989
12711 தக்மித் ஜனவரி 19, 1991
16465 பாசில்ரோவே மார்ச்சு 24, 1990
19204 யோழ்சுவாத்ரீ ஜூன் 21, 1992
24658 மிசுச் அக்தோபர் 18, 1987
(360191) 1988 TA{{{2}}}[3] அக்தோபர் 5, 1988
(408752) 1991 TB2 3 அக்தோபர் 1991
(412976) 1987 WC{{{2}}} 21 நவம்பர் 1987
  1. 1 அலைன் மவுரியுடன் இணைந்து
  2. 2 ஜே. டி. மெந்தங்காலுடன் இணைந்து
  3. 3 ஜே. பின்னேயுடன் இணைந்து

பலோமார் வான்காணகத்தில் பணிபுரியும்போது 7 அலைதகவு வால்வெள்ளிகள் உட்பட, 15 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். அந்த 7 வால்வெள்ளிகள் 120பி/மூயெல்லர், 131பி/மூயெல்லர், 136பி/மூயெல்லர், 149பி/மூயெல்லர், 173பி/மூயெல்லர், 188பி/நேரியல்பு மூயெல்லர், 190பி/மூயெல்லர் என்பனவாகும். மற்ற எட்டும் அலையா வால்வெள்ளீகள் ஆகும்.

இவர் 1987 முதல் 1993 வரை 13 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவற்றில் அப்பொல்லோ சிறுகோள்கள், 4257 உபாசுதி, 9162 கிவீல்லா, and 12711 துக்மித், அமோர் சிறுகோள், 6569 ஒந்தாத்யே ஆகிய பல புவியண்மை வான்பொருள்களும் அடங்கும்.[2]

இவர் 107 ( இவற்றில் 1991W, 1992W, 1992X ஆகியன விண்மீன்கள் ஆகும்) (9 இணைகண்டுபிடிப்புகள் ஆகும்) விண்மீன் பெருவெடிப்பு களைக் கண்டுபிடித்தார்.[3]

தகைமைகள்

[தொகு]

மூயெல்லரின் வான்பொருள்கள் கண்டுபிடிப்புகளுக்காக முதன்மைப் பட்டை சிறுகோளாகிய அங்காரியா குடும்பம் 4031 மூயெல்லர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது 1985 பிப்ரவரி 12 இல் கரோலின் சூமேக்கரால் பலோமார் வான்காணகத்தின் 18 இஞ்சு சுகிமிடு ஒளிப்படக் கருவியால் கண்டறியப்பட்டு, சிறுகோள் 1985 CL எனப் பெயரிடப் பட்டிருந்தது.[1] இதற்கான அலுவலக பெயரீட்டு அறிவிப்பு சிறுகோள் மையத்தால் 1989 திசம்பர் 12 இல் வெளியிடப்பட்டது (சி.கோ.சு. 15576).[4]

தொடர்புகள்

[தொகு]

இவர் மியடே 4எம் சமுதாயத்தின் அறிவுரைஞர் ஆவார். இது இவரது பரப்புறை செயல்பாடுகளுக்குப் பேராதரவு தந்துவருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (4031) Mueller. Springer Berlin Heidelberg. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  2. 2.0 2.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  3. http://www.cbat.eps.harvard.edu/lists/Supernovae.html
  4. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழீன்_மூயெல்லர்&oldid=2721184" இலிருந்து மீள்விக்கப்பட்டது