ழீன் தர்னர்
ழீன் எல். தர்னர் Jean L. Turner | |
---|---|
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | கலிபோனியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வார்டு பல்கலைக்கழகம்]] (வானியல் இளங்கலை) கலிபோனியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி (வானியல் முனைவர்) |
ழீன் எல். தர்னர் (Jean L. Turner) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இலாசு ஏஞ்சலீசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறை தகவுறு பேராசிரியரும் ஆவார்.[1] இவர் NGC 5253 எனும் பால்வெளிக் குறளியின் ஒரு தனிவின்மீன் கொத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்தவருள் முதன்மை வாட்ந்த பங்கேற்பாளி ஆவார். இது மிகவும் தூசு செறிந்த வளிம முகிலாகவும் உயர்திற விண்மீன் ஆக்கத்துக்கும் குறிப்பிடத் தகுந்த பால்வெளிக் குறளியாகும்.[2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15]
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் தன் வானியல் இளங்கலைப் பட்டத்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்தும் முனைவர் பட்டத்தை பெர்க்கேலியில் உள்ள கலிபோனியா பல்கலைக்கழகத்தில் இருந்தும் பெற்றார். 1984 முதல் 1986 வரை ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையத்தில் ஆய்வுறுப்பினராக இருந்தார்.இவர் 2004 இல் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு இணை ஆய்வாளராகவும் 2007 இல் இருந்து விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் வருகைதரு கரோலின் எர்ழ்சல் ஆய்வுறுப்பினராகவும் 2011 இல் இருந்து கூட்டு அதகாம்மா நோக்கீட்டகத்தின் பேரியல் மில்லிமீட்டர் அணியின் வருகைதரு அறிவியலாளராகவும் இருந்துள்ளார். இவர் 2006 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,,[16][17] மேலும் இவர்2014 முதல் 2018 வரை இலாசு ஏஞ்சலீசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்இயற்பியல், வானியல் துறையின் தலைவராக இருந்தார்.[1]
இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் செயல்முனைவான உறுப்பினர் ஆவார்.[18] இவர் ஏட் கிரீக் மில்லிமீட்டர் குறுக்கீட்டளவியையும் அதகாம்மா நோக்கீட்டகத்தின் பேரியல் மில்லிமீட்டர் அணியையும் உருவாக்கி இயக்கிவைத்தலில் பங்களிப்பு செய்துள்ளார்.[19]
ஆராய்ச்சிப் புலங்கள்
[தொகு]இவரது ஆராய்ச்சி சிறப்புத் தகைமை களப் பால்வெளிகளில் அமையும் இளம்மீவிண்மின் கொத்துகளின் வளிமச் சூழல்களில் கவிந்துள்ளது. குறிப்பாக இவர் ஓ வகை விண்மீன் காற்றுகளிலும் விண்மீனாக்கத் திறமையிலும் குவிந்துள்ளது.[20] மிக இளைய விண்மீன் கொத்துகள் தூசி செறிந்த வளிம முகில்களில் அமைந்துள்ளதால் இவற்றை ஒளியியல் தொலைநோக்கிகளால் நோக்குதல் இயலாது. எனவே இவற்றை நோக்கிட, அகச்சிவப்புக்கதிர் தொலைநோக்கிகளும் மில்லிமீட்ட அலைநீளத் தொலைநோக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன.[21] இவ்வகை ஆய்வுகள் தொடக்கநிலைப் பால்வழிக்கும் மூன்றாம் தலைமுறை உடுக்கணத் திரள் விண்மீன்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விளக்க உதவுகின்றன.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Jean Turner: Biography | UCLA Division of Astronomy & Astrophysics". www.astro.ucla.edu. Retrieved 2020-07-26.
- ↑ Turner, J. L.; Beck, S. C.; Benford, D. J.; Consiglio, S. M.; Ho, P. T. P.; Kovács, A.; Meier, D. S.; Zhao, J.-H. (March 2015). "Highly efficient star formation in NGC 5253 possibly from stream-fed accretion". Nature 519 (7543): 331–333. doi:10.1038/nature14218. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:25788096. http://arxiv.org/abs/1503.05254.
- ↑ Wolpert, Stuart; UCLA (2015-03-19). "Young Star Cluster Displays Highly Efficient Star Formation". SciTechDaily (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
- ↑ January 2006, Space com Staff 11. "Astronomers See 'Star Formation on Steroids'". Space.com (in ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "NGC 5253". wise-obs.tau.ac.il. Retrieved 2020-07-26.
- ↑ "Over million young stars found in nearby galaxy". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/science/over-million-young-stars-found-in-nearby-galaxy/articleshow/46620323.cms?from=mdr.
- ↑ "Astronomers watch star clusters spewing out dust: New observations confirm long-standing theory that stars are copious producers of heavy elements". ScienceDaily (in ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
- ↑ "More Than a Million Stars Forming In a Mysterious Dusty Gas Cloud - SpaceRef". spaceref.com. Retrieved 2020-07-26.
- ↑ "'Stunned' scientists discover star cluster". From the Grapevine (in ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
- ↑ "Nearby "Dwarf" Galaxy is Home to Luminous Star Cluster". Technology Org (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-06-10. Retrieved 2020-07-26.
- ↑ Press, Viva Sarah (2015-06-10). "Astronomers discover colossal star cluster". ISRAEL21c (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
- ↑ "Astronomers Spot Millions Of Stars Forming In Small Nearby Galaxy". IFLScience (in ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
- ↑ "Over million young stars found in nearby galaxy" (in en-IN). The Hindu. 2015-03-19. https://www.thehindu.com/sci-tech/science/over-million-young-stars-found-in-nearby-galaxy/article7011263.ece.
- ↑ "News Page (Astronomy & Astrophysics) - American Friends of Tel Aviv University". www.aftau.org. Retrieved 2020-07-26.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "UCLA astronomers watch star clusters spewing out dust". EurekAlert! (in ஆங்கிலம்). Retrieved 2020-07-26.
- ↑ "UCLA Fellows elected by the American Association for the Advancement of Science". ucla.edu.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Astronomy (Section D) | American Association for the Advancement of Science". www.aaas.org. Retrieved 2020-07-26.
- ↑ "International Astronomical Union | IAU". www.iau.org. Retrieved 2020-08-01.
- ↑ 19.0 19.1 "Jean Turner Homepage | UCLA Division of Astronomy & Astrophysics". www.astro.ucla.edu.
{{cite web}}
: Unknown parameter|access- e=
ignored (help) - ↑ Turner, Jean L. (August 2015). "Submillimeter View of Gas and Dust in the Forming Super Star Cluster in NGC 5253" (in en). Proceedings of the International Astronomical Union 12 (S316): 31–35. doi:10.1017/S1743921316008735. பன்னாட்டுத் தர தொடர் எண்:1743-9213.
- ↑ Turner, Jean L.; Consiglio, S. Michelle; Beck, Sara C.; Goss, W. M.; Ho, Paul. T. P.; Meier, David S.; Silich, Sergiy; Zhao, Jun-Hui (2017-09-01). "ALMA Detects CO(3–2) within a Super Star Cluster in NGC 5253". The Astrophysical Journal 846 (1): 73. doi:10.3847/1538-4357/aa8669. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. https://iopscience.iop.org/article/10.3847/1538-4357/aa8669.
வெளி இணைப்புகள்
[தொகு]- ழீன் தர்னர் publications indexed by Google Scholar