உள்ளடக்கத்துக்குச் செல்

லோசூங் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோசூங்
Losoong
வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சுங் மடாலயத்தில் கொண்டாடப்படும் புத்தாண்டு விழா
அதிகாரப்பூர்வ பெயர்லோசூங்
பிற பெயர்(கள்)சோனம் லோசூங், நம்சூங்
கடைப்பிடிப்போர்பூட்டியா மக்கள், லெப்சா மக்கள்
முக்கியத்துவம்சிக்கிம் புத்தாண்டு
லெப்சா புத்தாண்டு
நாள்திபெத்திய நாட்காட்டியில் 10ஆம் மாதம் 18ஆம் நாள்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனலோசார், கால்டன் நாம்சோட்

 

லோசூங் திருவிழா (Losoong Festival) என்பது சிக்கிம் மாநிலத்தினைச் சேர்ந்த பூட்டியா பழங்குடியினரின் புத்தாண்டு ஆகும்.[1] இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

பாரம்பரியம்

[தொகு]

திபெத்தியச் சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் விவசாயிகள் அறுவடையைக் கொண்டாடும் 10வது மாதத்தின் 18வது நாளில் லோசூங் வருகிறது.[2] இது பூட்டியா மக்களின் பாரம்பரிய விழாவாகும். இதனை லெப்சா மக்களும் கொண்டாடுகிறார்கள். இதை இவர்கள் நம்சூங் என்று அழைக்கிறார்கள்.[3] திபெத்தியப் புத்தாண்டான லோசரின் மரபுகள் மற்றும் சடங்குகளைத் தழுவி இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சிக்கிமில் உள்ள போடாங் மற்றும் ரும்டெக் மடாலயங்களில் இத்திருவிழா நடத்தப்படுகிறது. டீஸ்டா மற்றும் ரோங்யுங் சூ நதிகள் சங்கமிக்கும் அப்பர் சோங்கு பகுதியில் நம்சூங் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.[1]

லோசூங் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம் மற்றும் பூட்டானிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் போது நிகழ்த்தப்படும் நடன வடிவங்கள் பத்மசாம்பவாவின் (அல்லது குரு உக்யேன்) வாழ்க்கையிலிருந்து விவரிக்கப்பட்ட கதைகளைச் சித்தரிக்கின்றன.[4]

கொண்டாட்டம்

[தொகு]

பூசாரி 'சி-பூட்', சிறப்பு மதுபானம் ஒன்றைத் தெய்வங்களுக்கு வழங்கிய பிறகு கொண்டாட்டம் தொடங்குகிறது. கடவுளுக்குக் காணிக்கை செலுத்திய பிறகு அசுர மன்னனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. இந்த அரக்கனை எரிப்பது தீமையை அழிப்பதைக் குறிக்கிறது.

இத்திருவிழாவின் போது மக்களுக்கு ஒரு சில போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும். இதனை இவர்கள் பல நாட்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றன. இந்த விழா சோனம் லோசூங் என்றும் அழைக்கப்படுகிறது. லோசூங் திருவிழா கிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tshering, Ugen. "Losoong (Sikkimese New Year) - Windhorse Tours". Windhorse Tours. https://www.windhorsetours.com/festivals_wht/losoong-sikkimese-new-year/. 
  2. "State Portal, Government of Sikkim, India - Festivals In Sikkim". www.sikkim.gov.in. Retrieved 2017-08-11.
  3. FTD.Travel. "Lepcha(Losoong), Bhutia(Namsoong), Sonam Lhochar - Sikkim New Year". www.ftd.travel. Retrieved 2017-08-11.
  4. "Lasoong festival is celebrated in which of the following states? - General Knowledge Today". www.gktoday.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோசூங்_திருவிழா&oldid=3651444" இலிருந்து மீள்விக்கப்பட்டது