லேய்டின் கொள்கலன்
லேய்டின் கொள்கலன் (Leiden jar), என்பது நிலை மின்னை சேமித்துவைக்கும் ஒரு உபகரணமாகும். இதன் உட்புறமும் வெளிப்புறமும் காணப்படும் இரு மின்வாயிகளுக்கிடையில் மின் சேமிக்கப்படுகிறது. இந்த உபகரணம் தனித்தனியே சேர்மன் அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.[1]
விபரிப்பு
[தொகு]இதன் வகைமாதிரியான கட்டமைப்பு கண்ணாடிக் கொள்கலன் ஒன்றையும் அதனோடு இணைந்து உள், வெளி மேற்பரப்புகளைத் தொடும் உலோக இழைகளையும் கொண்டது. உலோக இழைகள் மின்னேற்றமடைவதைத் தடுப்பதற்காக கொள்கலனின் வாய்க்குக் கீழாக அது மட்டுப்படுத்தப்படும். அதிலிருந்து கொள்கலனின் வாய்க்கு வெளியே நீட்டியதாக ஒரு மின்வாயி பொருத்தப்படும். மின்வாயி சங்கிலி மூலம் உட்புற உலோக இழைக்கு பொருத்தப்பட்டு மின்பிறப்பாக்கி உடன் இணைக்கப்பட்டு மின்னேற்றமடைய விடப்படும். இதன்போது வெளிப்புற உலோக இழை புவித்தொடுப்பு செய்யப்படும். இதன் மூலம் உள்,வெளி இழைகளில் சம அளவிலான ஆனால் ஒன்றுக்கொன்று எதிரான ஏற்றங்கள் தேக்கமடையும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biography, Pieter (Petrus) van Musschenbroek பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்