உள்ளடக்கத்துக்குச் செல்

லெபனான் மரோனைட் கிறித்தவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெபனான் மரோனைட் கிறித்துவர்கள்
المسيحيين الموارنة اللبنانيين
லெபனான் நாட்டில் மரோனைட் கத்தோலிக்க கிறித்தவர்களின் பரம்பல்
மொழி(கள்)
வட்டார மொழிகள்:லெபனானிய அரபு மொழி, லெபனானிய அரமேயம்
வழிபாட்டு முறை: சிரியாக் மொழி
சமயங்கள்
கிறித்தவம் (கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்

லெபனான் மரோனைட் கிறித்தவர்கள் என்பவர்கள் மேற்காசியாவின் லெபனான் நாட்டில் வாழும் கத்தோலிக்க மரோனைட் கிறித்துவத்தவர்கள் ஆவர்.[1] லெபனான் கத்தோலிக்க மரோனைட் கிறித்தவர்கள் லெபனான் மலை மாகாணம் மற்றும் கிழக்கு பெய்ரூத் பகுதிகளில் அடர்த்தியாக வாழ்கின்றனர்.[2]லெபனான் மக்கள் தொகையில் மரோனைட் கிறித்தவர்கள் 30% ஆக உள்ளது.[1]

19ஆம் நுற்றாண்டின் முற்பகுதியில் லெபனான் மரோனைட் கிறித்தவர்களும், துருஸ் மக்களும் இணைந்து உதுமானியப் பேரரசின் ஒரு பகுதியாக தற்கால நவீன லெபனான் பகுதியை நிறுவினர்.[3]1860ல் மரோனைட்டுகளுக்கும், துருஸ் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கால், மொரோனைட்டு கிறித்தவர்கள் பெரும்பான்மை கொண்ட தன்னாட்சி லெபனான் மலை மாகாணம் நிறுவப்பட்டது.

முதலாம் உலகப் போரின் முடிவில் இசுலாமிய உதுமானியப் பேரரசு வீழ்ச்சி கண்டதால், மரோனைட்டு கிறித்தவர்கள் தன்னாட்சி லெபனான் மலை மாகாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இரண்டாம் உலகப் போர் முடிவில் பிரான்சு காலனியாக இருந்த லெபனான் மற்றும் சிரியா பகுதிகளின் பல இடங்களை மெரொனைட் கிறித்தவர்கள் ஆக்கிரமித்து கொண்டனர். 1975-1990 வரை நடைபெற்ற லெபனான் உள்நாட்டுப் போர் முடிவில் லெபனான் அரசியலில் மரோனைட் கிறித்தவர்களின் மேலாதிக்கம் வீழ்ந்து, லெபனான் சியா மற்றும் சுன்னி முஸ்லீம்களின் கை ஓங்கியது.[2]

லெபனான் அரசியலமைப்பு சட்டத்தில் சுன்னி, சியா முஸ்லீம்கள், மரோனைட் கிறித்தவர்கள் மற்றும் துருஸ் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.[4]

லெபனான் நாட்டின் பல்வேறு சமய நிறுவனங்கள் எழுதப்படாத லெபனான் தேசிய ஒப்பந்தப்படி, மரோனைட் கிறித்தவர் நாட்டின் குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டனர். [5]

பண்பாடு

[தொகு]

சமயம்

[தொகு]
சிரியாக் கிறித்துவக் குழுக்களில் ஒன்றான மரோனைட் கிறித்துவப் பிரிவு

துருக்கி நாட்டின் கத்தே மாகாணததின் கத்தோலிக்க கீழைத்திருச்சபைகளில் ஒன்றான அந்தியோக்கியா மரோனைட் சிரியாக் திருச்சபையின் வழிவந்தவர்கள் மரோனைட் கிறித்தவர்கள் ஆவார்.[6] திருச்சபை வழிபாட்டில் சிரியாக் மொழியை பயன்படுத்துகின்றனர்.

லெபனான் நாட்டில் மரோனைட் கிறித்தவர்களின் புவியியற் பரவல்

[தொகு]

பெய்ரூத், லெபனான் மலை மாகாணம், வடக்கு மாகாணத்தின் தெற்குப் பகுதி மற்றும் தெற்கு மாகாணத்தில் லெபனான் மரோனைட்கத்தோலிக்க கிறித்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[7]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

லெபனான் நாட்டின் மக்கள் தொகையில் மரோனைட் கத்தோலிக்க கிறித்தவர்களின் மக்கள் தொகை பரம்பல்:

லெபனான் மரோனைட் கத்தோலிக்க கிறித்துவர்கள்[8][9]
ஆண்டு விழுக்காடு
1932
35%
1985
46%
1994
31%
2012
24%
லெபனான் மக்கள் தொகையில் லெபனான் மரோனைட் கிறித்தவர்களின் விழுக்காடு [10][9][11][12][13][14][15]
ஆண்டு மரோனைட்டு கிறித்தவர்கள் மொத்த லெபனான் மக்கள் தொகை விழுக்காடு
1861 208,180 487,600 42.7%
1921 199,181 609,069 32.7%
1932 226,378 785,543 28.8%
1956 423,708 1,407,858 30.1%
1975 586,500 2,550,000 23%
1988 999,672 4,044,784 24.7%

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Department Of State. The Office of Electronic Information, Bureau of Public Affairs (2008-09-19). "Lebanon". 2001-2009.state.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-15.
  2. 2.0 2.1 Najem, Tom; Amore, Roy C.; Abu Khalil, As'ad (2021). Historical Dictionary of Lebanon. Historical Dictionaries of Asia, Oceania, and the Middle East (2nd ed.). Lanham Boulder New York London: Rowman & Littlefield. pp. 205–206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-2043-9.
  3. Deeb, Marius (2013). Syria, Iran, and Hezbollah: The Unholy Alliance and Its War on Lebanon. Hoover Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780817916664. the Maronites and the Druze, who founded Lebanon in the early eighteenth century.
  4. Jamie Stokes, ed. (2009). Encyclopedia of the Peoples of Africa and the Middle East. Facts On File, Incorporated: Infobase Publishing. p. 447. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-2676-0.
  5. "Programme on Governance in the Arab Region: Elections: Lebanon". United Nations Development Programme. Archived from the original on 18 July 2011. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
  6. Moosa, M (2005). The Maronites in History. Gorgias Press LLC. pp. 209–210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59333-182-5.
  7. "Maronites". Minority Rights Group International. 2005. Archived from the original on 16 January 2015. பார்க்கப்பட்ட நாள் 28 December 2013.
  8. "Contemporary distribution of Lebanon's main religious groups". Central Intelligence Agency. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  9. 9.0 9.1 "2012 Report on International Religious Freedom – Lebanon". United States Department of State. 20 May 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.
  10. Yahya, Houssam (2015). La protection sanitaire et sociale au Liban (1860-1963) (PDF) (Thesis). Université Nice Sophia Antipolis.
  11. "Lebanon: people and society"
  12. Gharbieh, Hussein M. (1996). Political awareness of the Shi'ites in Lebanon: the role of Sayyid 'Abd al-Husain Sharaf al-Din and Sayyid Musa al-Sadr (PDF) (Doctoral). Durham: Centre for Middle Eastern and Islamic Studies, University of Durham.
  13. Fahrenthold, Stacy (2019). Between the Ottomans and the Entente: The First World War in the Syrian and Lebanese Diaspora, 1908-1925. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190872151.
  14. Fawwaz Traboulsi, Social Classes and Political Power in Lebanon (Beirut: Heinrich Böll Stiftung, 2014)
  15. Abdel-Nour, Antoine (1982). Introduction à l'histoire urbaine de la Syrie ottomane (XVIe-XVIIIe siècle). Université Libanaise.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maronites
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

(in அரபு மொழி)