உள்ளடக்கத்துக்குச் செல்

லூயி அல்தூசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயி அல்தூசர்
பிறப்புலூயி பியர் அல்தூசர்
(1918-10-16)16 அக்டோபர் 1918
இறப்பு22 அக்டோபர் 1990(1990-10-22) (அகவை 72)
பிரஞ்சு
பள்ளிமார்க்சியம்
கட்டமைப்பியம்
முக்கிய ஆர்வங்கள்
அரசியல்
பொருளியல்
கருத்தாக்கம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
அதீத நிர்ணயவாதம்
தொடர்புடை சுயாட்சி
கருத்தாக்கம்
மையம் தகர்த்தல்
இடை வினா எழுப்புதல்

லூயி பியர் அல்தூசர் (பிரஞ்சு: [altysɛʁ]; 16 அக்டோபர் 1918 - 22 அக்டோபர் 1990) , ஒரு பிரஞ்சு நவீன மார்க்சிய தத்துவாதி.பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த அவர் , சில நேரங்களில் அதன் வலுவான விமர்சகராகவும் திகழ்ந்தார்.[1]

சிந்தனைகள்

[தொகு]

தொடர்புடை சுயாட்சி

[தொகு]

சிக்மண்ட் பிராய்ட் பயன்படுத்திய அதீத நிர்ணயவாதம்(Concept of Overdetermination) என்ற சொல்லைப் பயன்படுத்தி , இலக்கியத்தை யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என மட்டும் கொள்ளாமல், சமூக உருவாக்கத்தில் தன்னிறைவு பெற்றுத் தனித்து இயங்கும் தளம் என்று விளக்கினார்.எந்த ஒன்றும் ஏதோ ஒரு பொருளின் தாக்கத்தால் மட்டும் விளைவதில்லை. பல்வேறுபட்ட காரணிகள் ஒவ்வொரு கூறிலும் செயல்படுகின்றன. அடித்தளம், மேல்தளம் என்ற கருத்தாக்கத்தில் எல்லாமே பொருளாதாரம் என்கின்ற ஒன்றினால் இயங்குகின்றன என்ற கருத்துத் தென்படுகிறது. இதை அதீத நிர்ணய வாதமென்று கூறி அல்தூசர் மறுத்தார். கலை, பண்பாடு முதலிய கூறுகள் பொருளாதார உறவிலிருந்து தனித்து இயங்கக்கூடிய தன்மை கொண்டவை என வாதாடினார். இதைச் சுட்டுவதற்குத் ‘தொடர்புடை சுயாட்சி’ (Relative Autonomy) என்ற கோட்பாட்டை முன்வைத்தார். அதாவது இலக்கியம் தனித்து நின்று இயங்கும் ஆற்றல் கொண்டது என விளக்கினார். [2]

கருத்தாக்கம்

[தொகு]

கருத்தாக்கம்(Ideology) என்பது ஓர் அமைப்பு எனவும் ; படிமம், தொன்மம், கருத்து முதலியவற்றின் பிரதிநிதியாக இந்த அமைப்பு விளங்குகிறது என்று வாதிட்ட அவர் , இது ஒரு சமூகத்தின் இதயமாகத் தனது வரலாற்றுப் பங்களிப்பினை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது எனவும் கூறினார். .[2]

மையம் தகர்த்தல்

[தொகு]

எந்த ஓர் அமைப்பும் மையம் அல்லது சாராம்சம் அல்லது குவிமையம் எதையும் கொண்டிருக்க முடியாது என அவர் விவாதிக்கிறார். இந்த மையம் தகர்த்தல் (Decentering) மூலம் , அடித்தளம், மேல்தளம் என்று சாராம்சப்படுத்துகின்ற பழைய மார்க்சியப் பார்வையை விமர்சனத்திற்குட்படுத்துகிறார்.[3]

இடை வினா எழுப்புதல்

[தொகு]

அல்தூசர் எழுத்தில் வெளிப்படும் மற்றொரு சொல் ‘இடை வினா எழுப்புதல்’ எனப் பொருள்படும் interpellation என்ற சொல்லாகும். இந்தச் சொல் மூலம் மிக நுட்பமான முதலாளித்துவ அரசியலை வெளிக்கொணர்கிறார். முதலாளித்துவச் சமூகம், எல்லோரும் சுதந்திரமாகவும், தாம் விரும்புகிற வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தம் கையில் இருப்பது போலவும் மக்கள் உணரும்படி, தனது கருத்தாக்கம் மற்றும் கருத்தாக்கக் கருவிகள் மூலம் செய்கிறது. ஆனால், உண்மையில் ‘மக்கள் விருப்பம்’ என்பது மக்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பணமும் அதிகாரமும் கொண்ட சில ஆதிக்க சக்திகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ள மக்கள் இடைவினா எழுப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Louis Althusser". Stanford University. Retrieved 14 நவம்பர் 2013.
  2. 2.0 2.1 "நவீன மார்க்சியம்". தமிழ்ப்பேராயம். Retrieved 14 நவம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "நவீன மார்க்சியம்". தமிழ்ப்பேராயம். Retrieved 14 நவம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_அல்தூசர்&oldid=3227539" இலிருந்து மீள்விக்கப்பட்டது