உள்ளடக்கத்துக்குச் செல்

லீலாவதி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீலாவதி
பிறப்புலீலா கிரண்
1937
மங்களூர், சென்னை மாகாணம் (தற்போதைய கருநாடகம்), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிநடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், அறப்பணி செய்பவர்.[1]
செயற்பாட்டுக்
காலம்
1958 முதல் தற்போது வரை
பிள்ளைகள்வினோத் ராஜ்
வலைத்தளம்
Personal website

லீலாவதி (Leelavathi ) (1937 இல் லீலா கிரண் என்ற பெயரில் பிறந்த [2] இவர் ஓர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் முக்கியமாக பணியாற்றினார். ராஜ்குமார், விஷ்ணுவர்தன், ம. கோ. இராமச்சந்திரன், என். டி. ராமராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சங்கர் நாக், கமல்ஹாசன், இரசினிகாந்து, சிரஞ்சீவி, வீ. ரவிச்சந்திரன், சுதீப் போன்ற பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தொழில் வாழ்க்கையில் 600க்கும் மேற்பட்ட படங்களில் (கன்னடத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட) நடித்துள்ளார். நாகரஹாவு, அவர்கள் போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்களால் நினைவு கூறப்படுகிறது.

லீலாவதி தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இதில் 1999 ல் ராஜ்குமார் விருது, மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் போன்றவை அடங்கும்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

மைசூருக்குச் சென்ற பிறகு, சஞ்சல குமாரி படத்திலும், பின்னர் சங்கர் சிங்கின் நாககண்ணிகா என்ற படத்திலும் ஒரு சிறிய பாத்திரம் கிடைத்தது. இவர் மகாலிங்க பாகவதர் அணியில் சிறீ சாகித்ய சாம்ராஜ்ய நாடகக் குழுவில் சேர்ந்தார். சுப்பைய்யா நாயுடுவின் 1958 திரைப்படமான பக்த பிரகலாதாவில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாங்கல்யா யோகா, தர்ம விஜயம், ரணதீரா காந்தீரவா ஆகிய படங்களில் இவருக்கு ஒரு சிறிய பாத்திரங்கள் கிடைத்தன. ராணி ஹொன்னம்மா என்ற படத்திலிருந்து இவர் ஒரு முழு கதாநாயகி ஆனார்.

விருதுகளும், அங்கீகாரமும்

[தொகு]
  • ஐந்து நீண்ட தசாப்தங்களாக தென்னிந்தியத் திரைப்படத்திற்காக இவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக 2008 ஆம் ஆண்டில் தும்கூர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[3][4]
  • குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றார்.

ஆரோக்கியம்

[தொகு]

இவர் அக்டோபர் 15, 2011 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் இவருக்கு இதய பிரச்சினை இருந்தது. ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இதிலிருந்து இவர் மீண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது அறிக்கைகள் இவரது மகன் வினோத் ராஜ் என்பவரால் மறைக்கப்பட்டன. ஆனால் பின்னர் அது அக்டோபர் 25 அன்று ஒளிபரப்பப்பட்ட டிவி 9 செய்தி அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IndiaGlitz - Leelavathi builds hospital - Kannada Movie News". Archived from the original on 2009-02-14. Retrieved 2020-10-24.
  2. Leelavathi - IMDb
  3. http://www.indiaglitz.com/channels/kannada/article/43478.html பரணிடப்பட்டது 2008-12-26 at the வந்தவழி இயந்திரம்>
  4. News, Express (2009-01-10). "Leelavathi conferred with doctorate". The New Indian Express. Retrieved 2013-08-16. {{cite web}}: |last= has generic name (help)
  5. Veteran Actress Leelavathi Hospitalized

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலாவதி_(நடிகை)&oldid=4181282" இலிருந்து மீள்விக்கப்பட்டது