லிட்ச்பீல்டு தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்ச்பீல்டு தேசிய பூங்கா
Litchfield National Park
அருகாமை நகரம்அடிலெய்டு ஆறு
ஆள்கூறுகள்13°03′17″S 130°54′18″E / 13.05472°S 130.90500°E / -13.05472; 130.90500
பரப்பளவு1,461.18 கிமீ²
நிறுவப்பட்டது1986
நிருவாக அமைப்புவடபுலத்தின் பூங்காக்கள் மற்றும் வனவாழ்வு ஆணையம்

லிட்ச்பீல்டு தேசிய பூங்கா (Litchfield National Park), ஆஸ்திரேலியாவின் வடபுலத்தில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்காவும் சுற்றுலா மையமும் ஆகும். இது டார்வின் நகரின் தென்மேற்கே 100 கிமீ தூரத்தில் பாச்சிலர் என்ற நகருக்கு அண்மையில் அமைந்துள்ளாது. இதன் மொத்தப் பரப்பு கிட்டத்தட்ட 1500 கிமீ2 ஆகும். ஆண்டுதோறும் ஏறத்தாழ 260,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து போகின்றனர். 1986 ஆம் ஆண்டில் இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1864 இல் வட ஆட்புலத்தை ஆராய்ந்த பிரெடெரிக் என்றி லிட்ச்பீல்டு என்பவரின் நினைவாக இப்பூங்கா லிட்ச்பீல்டு தேசிய பூங்கா என அழைக்கப்பட்டது.

இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் அருவியும் அமைந்துள்ளது. மிகப் பெரிய கறையான் புற்றுகள் மலை போல் அமைந்துள்ளன. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி அருவி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆண்டு முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்தப் பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம்.

ஆத்திரேலியப் பழங்குடிகள் இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

படக் காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]